Published:Updated:

`வயதில் சிறியவன் என நம்பிச் சென்றுவிட்டேன்!’ - மாணவரால் கல்லூரிப் பேராசிரியைக்கு நேர்ந்த சோகம்

Victim
Victim

சவுக்கு மரங்கள் அடர்ந்த வெளிச்சம் இல்லாத பகுதியில் விவேஷ் இருசக்கர வாகனத்தை செலுத்தியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அந்தப் பேராசிரியை, `இந்தப் பகுதிக்கு ஏன் செல்கிறோம்?' எனக் கேட்டுள்ளார்.

பார்ட்டி கொடுப்பதாகக் கூறி கல்லூரி பேராசிரியை ஒருவரை இரவில் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்ற மாணவன் ஒருவன், அவரை மிரட்டி செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்துள்ளான். இதனால், பாதிக்கப்பட்ட பேராசிரியை கொடுத்த புகாரின்பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Mobile photo
Mobile photo

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேஷ். அம்பத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மேலும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வந்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரும் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாகப் பழகிவந்தனர். ‘இந்த வருடத்துடன் என்னுடைய படிப்பு முடியப் போகிறது. இதனால் உங்களுக்கு ஒரு பார்ட்டி கொடுக்க விரும்புகிறேன்’ என அந்தப் பெண் பேராசிரியையிடம் விவேஷ் தெரிவித்துள்ளார்.

`ஒரே நேரத்தில் 60 ஆபாச வீடியோக்கள் ஷேர்!' - பதறிய கேரள பெண் ஊழியர்கள்... சிக்கிய அதிகாரி

இதையடுத்து 19ம் தேதி இரவு சோழிங்கநல்லூரில் தங்கி இருந்த பேராசிரியையை பார்ட்டிக்கு அழைத்து வருவதற்காக அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துக் கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலைவழியாக மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி பகுதிக்குச் சென்றுள்ளார். சவுக்கு மரங்கள் அடர்ந்த வெளிச்சம் இல்லாத பகுதியில் விவேஷ் இருசக்கர வாகனத்தை செலுத்தியிருக்கிறார். இதனால், சந்தேகம் அடைந்த அந்தப் பேராசிரியை, `இந்தப் பகுதிக்கு ஏன் செல்கிறோம்?' எனக் கேட்டுள்ளார். `உள்ளேதான் பார்ட்டி ஹால் இருக்கிறது' எனச் சொல்லி அங்கே அழைத்துச் சென்றுள்ளார்.

chemmenchery police station
chemmenchery police station

அப்போது பேராசிரியையை வற்புறுத்தி கத்தியைக் காட்டி நிர்வாணப் படம் எடுத்துள்ளார். `யாரிடமும் இதைப்பற்றி தெரிவிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் சமூக வலைத்தளங்களில் இதைப் பரப்பிவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார்.

பேராசிரியை எவ்வளவோ கெஞ்சியும் அந்தப் படங்களை அழிக்க மறுத்து, அவரை விடுதிக்குக் கொண்டு வந்துவிட்டுச் சென்றுவிட்டார். இதன்பின்னர், தொடர்ந்து அவருக்குப் போன் செய்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். `நான் கூறுவதைக் கேட்காவிட்டால் உங்களுடைய புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் கசிய விட்டுவிடுவேன்' என பேராசிரியையை மிரட்டியுள்ளார். மாணவரால் தனக்கு நடந்த விஷயங்களை வெளியில் சொல்லவும் அவர் தயங்கியிருக்கிறார். ஆனால் மறுபுறம் மாணவனுடைய தொல்லை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. இதையடுத்து அந்தப் பேராசிரியை செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

“என்னைவிட வயதில் சிறியவன் என நம்பி அவனுடன் பார்ட்டிக்கு சென்றேன். பூஞ்சேரி பகுதிக்குச் சென்றதும் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி என்னை மிரட்டி உடைகளை களையச் சொல்லி மிரட்டினான். நான் கதறி அழுதும் எவ்வளவு கெஞ்சியும் விடவில்லை. பிறகு என் உடைகளைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக செல்போனில் படம் எடுத்தான்” என அந்தப் பேராசிரியை புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்கம் போல அந்த மாணவனிடம் பேசச் சொன்னார்கள். இதையடுத்து விவேஷை, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அந்தப் பேராசிரியை வரச்சொன்னார். அங்கு வந்த விவேஷைப் போலீஸார் கைது செய்தனர்.

Arrest
Arrest

“இதுபோன்ற சம்பவங்களில் தயக்கம் காட்டாமல் பெண்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் ஆண் நண்பர்களுடன் தனியாக செல்வதையும் பெண்கள் தவிர்க்க வேண்டும்“ என்கின்றனர் காவல்துறையினர்.

பின் செல்ல