Published:Updated:

சென்னை: போட்டோவால் காதலில் விரிசல் - தற்கொலை செய்வதற்கு முன்னர் மாணவி அனுப்பிய மெசேஜ்!

தற்கொலை - Representational Image
News
தற்கொலை - Representational Image

`என் மகளும் அவனும் கடந்த ஆறு மாதங்களாகப் பழகிவந்தனர். அவனுக்குச் சில பெண்களுடன் பழக்கம் இருந்ததால் மனவிரக்தியடைந்த என் மகள், தற்கொலை செய்துகொண்டாள்’ என்று கல்லூரி மாணவியின் தந்தை புகாரளித்திருக்கிறார்.

சென்னை, அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 30.11.2021-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் நியூ ஆவடி சாலையில் அலங்காரப் பூக்கள் செடிகள் விற்கும் நர்சரி நடத்திவருகிறேன். என் மூத்த மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தாள். அவளுக்கு 17 வயதாகிறது. 30.11.2021-ம் தேதி மழையின் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை. அதனால் என் மகள் கல்லூரிக்குச் செல்லவில்லை. நான் வழக்கம்போல நர்சரிக்குச் சென்றுவிட்டேன்.

மெசேஜ்
மெசேஜ்

என் மகளும் மனைவியும் அருகிலுள்ள அடகுக் கடைக்குச் சென்று அடகுவைத்த கொலுசை மீட்கச் சென்றனர். அதன் பிறகு என் மாமனார் என் நர்சரிக்கு வந்து, `உன் மகள் எங்கள் வீட்டுக்கு வந்தாள். பிறகு அவள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாள்’ என்று தெரிவித்தார். நான் மருத்துவமனைக்குச் சென்று என் மகளைப் பார்த்தேன். என் மகள் இறப்பதற்கு எங்கள் வீட்டின் அருகிலுள்ள ஸ்ரீராம் (18) என்பவர்தான் காரணம். ஸ்ரீராமும் என் மகளும் கடந்த ஆறு மாதங்களாக பேசிப் பழகி வந்திருக்கின்றனர். ஸ்ரீராமுக்கு வேறு சில பெண்களுடன் பழக்கம் இருந்தது தெரியவந்ததும் என் மகள் விரக்தியால் தற்கொலை செய்துகொண்டாள். எனவே, என் மகள் சாவுக்கு காரணமான ஸ்ரீராம், அவரின் குடும்பத்தினர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து டி.பி.சத்திரம் போலீஸார் கூறுகையில், ``விஜயகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம். தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோது சில ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. விஜயகுமாரின் வீட்டின் அருகில் குடியிருக்கும் கல்லூரி மாணவன் ஸ்ரீராமும், தற்கொலை செய்துகொண்ட மாணவியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளன. இவர்கள் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் ஸ்ரீராம், வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை கல்லூரி மாணவிக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்

அதைப் பார்த்து விரக்தியடைந்த மாணவி, இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கும் கல்லூரி மாணவன் ஸ்ரீராம், தலைமறைவாக இருக்கிறார். அவரிடம் விசாரித்தால் மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.மேலும் தற்கொலை செய்துகொண்ட மாணவி, தன்னுடைய சாவுக்கு ஸ்ரீராம்தான் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அது தொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

ஸ்ரீராமைக் கைதுசெய்யும் வரை மாணவியின் சடலத்தை வாங்க மாட்டோம் என அவரின் பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.