Published:Updated:

விபத்தில் காயம்; கால்பந்து விளையாட முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர்‌ தற்கொலை? - போலீஸ் விசாரணை!

செல்வக்குமார்

விருதுநகரில் கால்பந்து விளையாட முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயம்; கால்பந்து விளையாட முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர்‌ தற்கொலை? - போலீஸ் விசாரணை!

விருதுநகரில் கால்பந்து விளையாட முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
செல்வக்குமார்

விருதுநகர் பட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் சிவராஜன்-லதா தம்பதியர். இவர்களின் மகன் செல்வக்குமார் (22). விருதுநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் உடற்கல்வியியல் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய செல்வக்குமார், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பின்னர், அவர் அந்தப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதான மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. செல்வகுமார் கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம்கொண்டவராக இருந்திருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சவ்வு விலகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரால் சரிவர கால்பந்து விளையாட முடியாமல்போனதாகச் சொல்லப்படுகிறது. `என்னால் முன்புபோல சரிவர கால்பந்து விளையாட முடியவில்லை' எனக் கூறி தினமும் தன் தாயிடம் அழுதிருக்கிறார் செல்வக்குமார். அப்போதெல்லாம் லதா, அவரைத் தேற்றி ஆறுதல்படுத்தியுள்ளார்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மிகுந்த கவலையுடன் காணப்பட்ட செல்வக்குமார், இரவு 9 மணி போல் `அம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்' என்று கூறி வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த செல்வக்குமாரின் பெற்றோர்கள் மகனைப் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். செல்வக்குமாரின் நண்பர்களுக்கு போன் செய்து கேட்டபோதும்கூட `அவன் அப்பவே வீட்டுக்கு கிளம்பிட்டானே' என்றே பதில் சொல்லியுள்ளனர். இதனால் பதறிப்போன செல்வக்குமாரின் பெற்றோர விடிய விடிய தூங்காமல் தங்கள் மகனைத் தேடி களைத்து அயர்ந்துவிட்டனர்.

இந்நிலையில், அந்தப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு நடைப்பயிற்சிக்கு சென்ற சிலர், மைதான வளாக மரத்தில் செல்வக்குமார் தூக்கில் தொங்கியபடி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவர் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து ஓடோடி வந்த செல்வக்குமாரின் பெற்றோர், மகன் தூக்கில் பிணமாகக் கிடப்பதை கண்டு கதறி அழுதனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸார், செல்வக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக லதா கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

செல்வக்குமார்
செல்வக்குமார்

உயிரிழந்த செல்வக்குமாரின் தாய் அந்தப் பகுதியில் வளையல் கடை நடத்திவருகிறார். தந்தை சிவராஜன் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். இந்தத் தம்பதியின் மூத்த மகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism