Published:Updated:

கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை; சக மாணவன் செய்த கொடூரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போலீஸால் கைதுசெய்யப்பட்ட மாணவன் அபிஷேக் பைஜூ
போலீஸால் கைதுசெய்யப்பட்ட மாணவன் அபிஷேக் பைஜூ

கல்லூரியில் தேர்வு எழுதச் சென்ற மாணவியை, உடன் படிக்கும் மாணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், பலாவிலுள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் ஃபுட் பிராசஸிங் டெக்னாலாஜி பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார் வைக்கம் தலையோலப்பறம்பு பகுதியைச் சேர்ந்த நிதினா மோள் (22). இன்று மூன்றாமாண்டு தேர்வு எழுதுவதற்காகக் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார் நிதினா மோள். தேர்வு எழுதி முடிந்து வெளியே வந்தவர், கிரவுண்ட் அருகே சென்றிருக்கிறார். அங்கு நிதினா மோளுடன் படித்துவந்த வகுப்புத் தோழன் அபிஷேக் பைஜூ என்பவர் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவர்ர் திடீரென தன்னிடம் மறைத்துவைத்திருந்த பிளேடு போன்ற சிறு கத்தியால் மாணவி நிதினா மோளின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். . மாணவியின் அலறல் கேட்டு கல்லூரி வளாகத்தில் நின்ற பாதுகாவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் துடித்த நிதினா மோளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நிதினா மோள் உயிரிழந்தார்.

போலீஸால் கைதுசெய்யப்பட்ட மாணவன் அபிஷேக் பைஜூ
போலீஸால் கைதுசெய்யப்பட்ட மாணவன் அபிஷேக் பைஜூ

பின்னர் போலீஸார் அங்கு சென்று மாணவன் அபிஷேக் பைஜூவைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ``அபிஷேக் பைஜூவும், நிதினா மோளும் நெருங்கிய நண்பர்கள். கொரோனா காரணமாக கல்லூரி திறக்காமல் இருந்தது. ஆனால் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மூன்றாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு இன்று தொடங்கியது. காலையில் ஹால் டிக்கெட் விநியோகித்தார்கள். பின்னர் நாங்கள் தேர்வு எழுதினோம். அபிஷேக் பைஜூவும் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தார்.

நாங்கள் தேர்வு அறையைவிட்டு வெளியே வரும்போது கல்லூரி வளாகத்தில் போலீஸ் நின்றது. எதற்காக போலீஸ் வந்தது என விசாரித்தபோது கொலை நடந்ததாகச் சொன்னார்கள். காலையில் அபிஷேக் பைஜூ சாதாரணமாகத்தான் இருந்தான். அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னை என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்றனர். அபிஷேக் பைஜூ காதல் விவகாரத்தால் இப்படி நடந்துகொண்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தாம்பரம்:  ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை; போலீஸார் தீவிர விசாரணை
கொலை
கொலை

அபிஷேக் பைஜூ தனது வாக்குமூலத்தில், ``நிதினா மோளை நான் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்தேன். சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. இதனால் எனக்கு அவள்மீது கோபம் ஏற்பட்டது. கொலை செய்யும் எண்ணத்தில் நான் வரவில்லை. என் கைகளை அறுத்து ரத்தத்தைக் காட்டி அவளை பயமுறுத்துவதற்காகத்தான் கத்தியைக் கொண்டு வந்தேன்" எனக் கூறியிருக்கிறார். கல்லூரி வளாகத்திலேயே மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு