Published:Updated:

திருவள்ளூர்: பள்ளி மாணவிகளுக்கு டார்ச்சர்! - கல்லூரி மாணவன் கொலையில் என்ன நடந்தது?!

கொலைசெய்யப்பட்ட கல்லூரி மாணவன் பிரேம்குமார்
News
கொலைசெய்யப்பட்ட கல்லூரி மாணவன் பிரேம்குமார்

திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் என்ன நடந்தது என்பதை போலீஸிடம் சிக்கியவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு பகுதியில் கடந்த 18-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (20) என்ற கல்லூரி மாணவனின் சடலத்தை ஆரம்பாக்கம் போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீஸார் நடத்திய விசாரணையில், பிரேம்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேம்குமாரைக் கொலை செய்த வழக்கில் அசோக், லெவின், ஞானசேகர் ஆகிய மூன்று பேரை போலீஸார் பிடித்து விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசோக்
அசோக்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட கல்லூரி மாணவன் பிரேம்குமாருக்கும், தாம்பரம் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் ராதிகா, சந்தியா (பெயர் மாற்றம்) ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாணவிகளும் பிரேம்குமாரும் போனில் ஆபாசமாகப் பேசிவந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த உரையாடலை ரெக்கார்டு செய்த பிரேம்குமார், அதைவைத்து மாணவிகளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் சமூக வலைதளம் மூலம் மாணவிகளுக்கு அறிமுகமான அசோக்கிடம் (21) உதவி கேட்டுள்ளனர். உடனே பிரேம்குமாரை கண்டிப்பதாக அசோக் கூறியிருக்கிறார். இதையடுத்து எளாவூர் சோதனைச்சாவடிக்கு பிரேம்குமாரை வரவழைக்க மாணவிகள் மூலம் அசோக் திட்டமிட்டார். சம்பவத்தன்று எளாவூர் சோதனைச்சாவடி பகுதியில் தனியாக நிற்பதாக இரண்டு மாணவிகளும் போன் மூலம் பிரேம்குமாரிடம் கூறியிருக்கின்றனர். அப்போது தங்களை அழைத்துச் செல்லும்படி பிரேம்குமாரிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். அதை உண்மையென நம்பிய பிரேம்குமார் பைக்கில் எளாவூர் சோதனைச்சாவடிக்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு அசோக், அவரின் நண்பர்கள் திட்டமிட்டப்படி காத்திருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்னர் பிரேம்குமார் அணிந்திருந்த டிரெஸ், பைக் பதிவு நம்பர் ஆகியவற்றை மாணவிகள் மூலம் தெரிந்துகொண்ட அசோக், அவரை நண்பர்கள் உதவியோடு கும்மிடிப்பூண்டியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பைக்கில் கடத்திச் சென்றார். அப்போது பிரேம்குமாரிடம் ஏன் மாணவிகளை மிரட்டிப் பணம் பறித்தாய் என்று கேட்டுள்ளனர். அப்போது பிரேம்குமாருக்கும் அசோக் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியிருக்கிறது. பிரேம்குமாரை அசோக் கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் பிரேம்குமார் மயங்கியிருக்கிறார்.

லெவின்
லெவின்

இதையடுத்து அசோக்கின் நண்பர்களில் மூன்று பேர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அதனால் அசோக், அவரின் நண்பர் லெவின் ஆகியோர் ஒரு பைக்கில் பிரேம்குமாரை நடுவில் அமரவைத்து பெரிய ஓபுளாபுரம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அசோக், லெவின் இருவரும் தங்களுடைய நண்பனான ஞானசேகரிடம் (28) விவரத்தைக் கூறி பெரிய ஓபுளாபுரத்துக்கு வரும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த ஞானசேகர், அசோக், லெவின் ஆகியோர் சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர். போதை தலைக்கேறியதும் பிரேம்குமாரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த இவர்கள், ஏரிக்கரைப் பகுதியில் குழிதோண்டிப் புதைத்திருக்கின்றனர்.

இந்த வழக்கில் அசோக், லெவின், ஞானசேகர் ஆகியோரை பிடித்திருக்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. விசாரணைக்குப் பிறகு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கைதுசெய்யப்பட்ட அசோக், லெவின், ஞானசேகர் ஆகியோர் கும்மிடிப்பூண்டி, பொன்னேரிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்" என்றனர்.