Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: வீட்டில் தனியாக இருந்த மாணவி; திருட்டைத் தடுக்க முயற்சி! - நகைக்காக நடந்த கொடூரம்

 கொலை
கொலை

நகைகளைத் திருட முயன்றபோது, லோகப்பிரியா அவர்களைத் தடுத்ததோடு, கத்திக் கூச்சலிட முயன்றுள்ளார். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் லோகப்பிரியாவின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு நகைகளைத் திருடிச் சென்றனர்.

புதுக்கோட்டை, பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மனைவி சிவகாமி. மின்வாரியத்தில் பணியாற்றிவந்த பழனியப்பன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணியின்போதே இறந்துவிடவே, அவரது வேலை சிவகாமிக்குக் கிடைத்திருக்கிறது. இவர்களுக்கு ஒரே மகள் லோகப்பிரியா (21). புதுக்கோட்டை, அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம் படித்துவந்திருக்கிறார். மின்வாரிய வேலைக்குச் சென்றுவரும் சிவகாமி ஒரு சில நாள்கள் வீட்டுக்கு வர இரவு நீண்ட நேரமாகிவிடுமாம். அப்போதெல்லாம் லோகப்பிரியா வீட்டில் தனியா இருந்திருக்கிறார். இதேபோல், நேற்றும் சிவகாமி பணிக்குச் சென்று வீடு திரும்ப இரவான நிலையில், லோகப்பிரியா வீட்டின் பின்பக்கக் கதவை மட்டும் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வீட்டுக்குள் டி.வி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

கொலை
கொலை

அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர், லோகப்பிரியாவின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி அவர் கழுத்தில், காதில் அணிந்திருந்த நகைகளைப் பறித்துள்ளனர். தொடர்ந்து பீரோவிலிருந்த நகைகளைத் திருட முயன்றபோது, லோகப்பிரியா அவர்களைத் தடுத்ததோடு கத்திக் கூச்சலிட முயன்றிருக்கிறார். உடனே டேப் சுற்றி அவரின் வாயை அடைத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து கூச்சலிட முயலவே, ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் லோகப்பிரியாவின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு வீட்டுக்குள் இருந்த 30 பவுன் மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றனர்.

இதில், லோகப்பிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து கிடந்தார். வீடு திரும்பிய சிவகாமி மகளின் அறைக்குள் சென்று பார்த்தபோது மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, கதறி அழுதார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இது குறித்து கணேஷ் நகர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், லோகபிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலைஒ
கொலைஒ
கொலை

தொடர்ந்து, மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். நகைக்காக, இளம்பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைக்காக இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு