Published:Updated:

ராமநாதபுரம்: ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் நிராகரிப்பு... விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்

தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் சரண்

ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் அனைத்து உடற்தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்றும், நிராகரிக்கப்பட்டதால், மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்: ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் நிராகரிப்பு... விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்

ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் அனைத்து உடற்தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்றும், நிராகரிக்கப்பட்டதால், மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published:Updated:
தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் சரண்

ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை பஞ்சாயத்து, முதுனால் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கூட்டுறவு பண்ணையில் பால் ஊற்றும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகன் சரண் (20). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே கனவாக இருந்து வந்துள்ளது. அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்கள் நடக்கும் மாவட்டங்களுக்கு சென்று பங்கேற்று வந்துள்ளார். தான் நிராகரிக்கப்பட்டாலும், அதற்கான காரணத்தை அறிந்து அதில் முழு பயிற்சியில் ஈடுபட்டு தன்னை தயார்படுத்தியுள்ளார்.

பஜார் காவல் நிலையம்
பஜார் காவல் நிலையம்

இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ளார். அதில் அனைத்து உடற்தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இறுதியாக அவரை சோதனை செய்தபோது காலில் சிறு தழும்பு இருப்பதாக கூறி சரண் நிராகரிக்கப்பட்டதாக மாணவர் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனை தனது பெற்றோரிடம் சொல்லி புலம்பியுள்ளாராம். தான் நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் உடைந்து காணப்பட்ட சரண், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் நிராகரிக்கப்பட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.