Published:Updated:

``இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’’ - நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்தில் தந்தை புகார்

தற்கொலை

கல்லூரி முதல்வரின் தொடர் அழுத்தம் காரணமாக, மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டார் என மாணவியின் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’’ - நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்தில் தந்தை புகார்

கல்லூரி முதல்வரின் தொடர் அழுத்தம் காரணமாக, மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டார் என மாணவியின் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். நகைத் தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். 21 வயதாகும் அவரின் மகள் கார்த்திகாதேவி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரகொண்டா பகுதியிலிருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் நான்காம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், இரண்டு நாள் முன்னர் காலை நேரத்தில் கல்லூரியிலிருந்து மாணவியின் பெற்றோருக்குப் போன் வந்தது. `உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை’ என்று கூறியதை கேட்டதும் பெற்றோர் பதறிபோயினர். இதையடுத்து, மகன் கோகுல்வாசனை அனுப்பி கார்த்திகாதேவியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இரவு 8.30 மணிக்கு வீடுவந்து சேர்ந்தனர். மிகுந்த மனவேதனையோடு காணப்பட்ட மாணவி பெற்றோருடன்கூட சரியாக பேசாமல் இருந்திருக்கிறார். பின்னர், அவரை சமாதானம் செய்து அருகிலேயே படுத்து தூங்க வைத்தனர்.

கார்த்திகாதேவி
கார்த்திகாதேவி

நேற்றுமுந்தினம் காலை 5 மணிக்கு பெற்றோர் பார்த்தபோது, அருகில் தூங்கிகொண்டிருந்த மகள் காணாமல்போனதை கண்டு திடுக்கிட்டு எழுந்தனர். வீடு முழுவதும் தேடி பார்த்தபோது, உடற்பயிற்சி செய்யும் அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை நீண்ட நேரம் தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. இதையடுத்து, குமரேசனும் அவரின் 2 மகன்களும் சேர்ந்து கதவை உடைத்தனர். அப்போது, மாணவி கார்த்திகாதேவி தூக்கில் சடலமாக தொங்கிகொண்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து, கதறி அழுதனர். தூக்கிலிருந்து மாணவியின் சடலத்தை கீழே இறக்கி, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து, பெற்றோர் கொடுத்தப் புகாரின்பேரில், குடியாத்தம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புகார் மனுவில், தங்க சங்கிலி அணிந்திருந்ததால் மகளை, கல்லூரி ஆசிரியை மிகக் கடுமையாக கண்டித்ததாகவும், நான்காம் ஆண்டில் தேர்ச்சிபெறாமல் செய்து விடுவேன் என மிரட்டியதாலும் மகள் மன உளைச்சலில் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்கள். மகளின் தற்கொலை முடிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

மாணவியின் மரணம் குறித்து அவரின் தந்தை குமரேசனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.

‘‘எனக்கு ஒரே பொண்ணு சார். அவ மேல நான் உயிரையே வெச்சிருந்தேன். அவ படிச்ச, நர்சிங் கல்லூரி முதல்வரும் ஒரு பெண்தான். அவருக்கு என் மகளை கண்டாலே ஆகாது. எப்போ பார்த்தாலும் திட்டித் தீர்ப்பார். ’சீன் போடுறியா’னு கேட்டு மத்த பொண்ணுங்க முன்னாடியே அசங்கமா பேசியிருக்கிறாங்க.

தற்கொலை
தற்கொலை

காய்ச்சல்ல இருந்த பொண்ணு ஒருவாய் இட்லியோடு நைட்டு முழுக்க தவிச்சிருக்கா. மறுநாள் காலையில முதல்வர்தான் போன் பண்ணி ‘உங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்ல, வந்து கூட்டிக்கிட்டு போங்க’னு சொன்னாங்க. நாங்களும் கூட்டிக்கிட்டு வந்துவிட்டோம். ‘இந்த காலேஜ் இல்லைனா, வேற காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்கிறேன். நீ எதுக்கும் கவலைப்படாதமா’னு பொண்ணுக்கிட்ட சொன்னேன். ‘இல்லப்பா, என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டாங்க. இனிமேல் என்னால படிக்க முடியாது’னு புலம்பிக்கிட்டே இருந்தா. சமாதானம் செஞ்சியும், தூக்குல தொங்கிட்டா. பொண்ணு சாவுக்கு காரணமானவர்கள் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார் கதறி அழுதபடி...!