Published:Updated:

`லவ்' டார்ச்சரால் விஷம் குடித்த கல்லூரி மாணவி... தந்தைக்குக் கொலை மிரட்டல்! - சேலத்தில் பரபரப்பு

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

கல்லூரி மாணவியைக் காதலிக்கச் சொல்லி, இளைஞர் ஒருவர் தொல்லை கொடுத்ததால், அந்த மாணவி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`லவ்' டார்ச்சரால் விஷம் குடித்த கல்லூரி மாணவி... தந்தைக்குக் கொலை மிரட்டல்! - சேலத்தில் பரபரப்பு

கல்லூரி மாணவியைக் காதலிக்கச் சொல்லி, இளைஞர் ஒருவர் தொல்லை கொடுத்ததால், அந்த மாணவி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

சேலம், ஓமலூர் அருகேயுள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி. கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலைபட்சமாகக் காதலித்து வந்திருக்கிறார். இந்த நபர் பலமுறை சம்பந்தப்பட்ட மாணவியிடம் காதலிப்பதாகக் கூறி, தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்த மாணவி அதைப் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. சபரி ஒரு கட்டத்துக்கு மேல் அந்த மாணவியைத் தன்னிடம் பேசுமாறு மூளைச்சலவை செய்திருக்கிறார். அதன் பின்பு, சபரியுடன் மாணவியும் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இது மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்த நிலையில், இதைப் பெற்றோர் கண்டித்திருக்கின்றனர். அதன் பிறகு சபரியுடன் பேசுவதை அந்த மாணவி நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மாணவி திடீரென விஷம் குடித்ததையடுத்து, வீட்டில் மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக மாணவியைப் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், ஓமலூர் மகளிர் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விஷம்
விஷம்

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சபரி அந்த மாணவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, `என்னைக் காதலிக்க வேண்டும். இல்லையெனில் நீ என்னுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மாணவியின் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இவ்வாறு மாணவியைத் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால், மனவேதனையில் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து சபரி மீது ஓமலூர் மகளிர் போலீஸார் போக்சோ, கொலை மிரட்டல், வன்கொடுமை ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் சபரியைத் தேடிவருகின்றனர்.