Published:Updated:

சாமி ஊர்வலத்தில் இரு சமூகத்தினர் மோதல்; ஜான்பாண்டியன்மீது செருப்பு வீச்சு... பெரம்பலூரில் பதற்றம்!

சாரட் வண்டியில் ஜான்பாண்டியன்

சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் ஜான்பாண்டியன்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாமி ஊர்வலத்தில் இரு சமூகத்தினர் மோதல்; ஜான்பாண்டியன்மீது செருப்பு வீச்சு... பெரம்பலூரில் பதற்றம்!

சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் ஜான்பாண்டியன்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சாரட் வண்டியில் ஜான்பாண்டியன்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்துக்குப் பின்பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் வழிபடும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் இருக்கிறது. அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒவ்வோர் ஆண்டும் முயல் வேட்டை திருவிழா நடத்தி, சாமியை வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சாமி வீதி உலா, பால்குடம் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அதே கிராமத்தில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் சாமி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியது. அதன்படி பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று முத்துமாரியம்மன் சாமி ஊர்வலம் மற்றும் பால்குடம் எடுக்க ஏற்பாடு செய்தனர். இதில்தான் பிரச்னை வெடித்திருக்கிறது.

சாரட் வண்டியில் ஜான்பாண்டியன்
சாரட் வண்டியில் ஜான்பாண்டியன்

என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் சாமி புறப்பாட்டின்போது வெடி வெடிப்பது, மேள தாளம் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அவர்கள் அதைக் கேட்காமல் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் சாலையின் வீதி வழியாகச் சாமி மற்றும் பால்குடம் ஊர்வலம் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, இதை அனுமதிக்க மாட்டோம் என்று மாற்றுச் சமூகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமரன், பெரம்பலூர் எஸ்.பி மணி ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஊர்வலம் மற்றும் பால்குடம் நடந்தது.

ஜான்பாண்டியன்
ஜான்பாண்டியன்

இதில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனுக்குப் பரிவட்டம் கட்டி, சாரட் வண்டியில் அமரவைத்து, வெடி வெடித்து ஆரவாரத்துடன் சாலை வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதற்கு, மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஜான்பாண்டியன்மீது செருப்பு வீசினர். ஜான்பாண்டியன்மீது வீசப்பட்ட செருப்பு சாரட் வண்டியில் பட்டு கீழே விழுந்தது.

போராட்டத்தில் பெண்கள்
போராட்டத்தில் பெண்கள்

இதனால், இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. செருப்பு வீசியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேரை விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கின்றனர். திருவிழா நடத்தியவர்கள் 30 பேர் மீதும், திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 27 பேர் மீதும் பாடாலூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சாதி மோதல் வந்துவிடாமலிருக்க போலீஸார் அந்தப் பகுதியில் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism