Published:Updated:

சென்னை: 'ஆன்லைன் கேமில் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசப் பேச்சு!'- யூ-டியூபர் மீது குவியும் புகார்கள்!

OnePlus 7 pro Gaming
OnePlus 7 pro Gaming

சிறுவர், சிறுமிகள் அதிகளவில் விளையாடும் ஆபத்தான ஆன்லைன் கேமின் யூ-டியூபர் மதன் என்பவர் ஆபாசமாக பேசுவதாக சைபர் க்ரைம் குற்றப்பிரிவிலும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் கேம்களில் சிறுவர், சிறுமிகள் மூழ்கிக் கிடக்கின்றனர். அதிலும் கொரோனா ஊரடங்கில் முழுநேரமாக குழந்தைகள் ஆன்லைன் கேம்களிலேயே தங்களின் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அவர்களைக் குறிவைத்து ஏராளமான ஆன்லைன் கேம்கள் உள்ளன. அதில் சில கேம்கள், குழந்தைகளின் உயிர்களைப் பறிப்பதாக புகார்கள் வந்ததையடுத்து அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் புதுப்புது பெயர்களில் அந்த கேம்கள் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அதை சட்டவிரோதமாக குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.

ஆன் லைன்
ஆன் லைன்

குறிப்பிட்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு குறித்து விளக்க யூ-டியூப் சேனல் ஒன்றை மதன் என்பவர் தொடங்கினார். ஆன்லைனில் விளையாடிக்கொண்டே கேமின் நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்து வந்திருக்கிறார் இளைஞர் மதன். அதனால் மதனின் அந்த யூ-டியூப் சேனலை ஏராளமான சிறுவர், சிறுமிகள் பார்க்கத் தொடங்கினர். அதனால் யூ-டியூப் சேனலுக்கு வருமானம் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில்தான், டாக்ஸிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனலில் விளையாட்டின் டிப்ஸ், டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதைவிட ஆபாசமான உரையாடல்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன. அதை சில சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வமாக ரசித்திருக்கின்றனர்.

சிறுவர்கள் என்றால் 'போடா, டீசல் மண்டையா!' என்று கூறும் யூடியூப் நிர்வாகி, சிறுமிகள் என்றால் அவர்களிடம் ஆபாசமாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், 'நீ எனக்கு மூன்றாவது மனைவியாக இரு!' என்று யூ-டியூப் நிர்வாகி சொல்வதோடு முதலிரவு செல்லும் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் விரிவாக விளக்கமளிக்கிறார். அதில் தன்னுடைய அனுபவங்களையும் சிறுவர், சிறுமிகளிடம் பகிர்ந்து கொள்ளும் வீடியோவும் ஆடியோவும் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

திருச்சி:`கடன் வாங்கி ஆன்லைன் கேம்; பறிபோன பணம்!' - மன உளைச்சலால் காவலர் தற்கொலை
You Tube
You Tube

இதுகுறித்து சைபர் க்ரைம் குற்றப்பிரிவிலும் முதல்வர் தனிப்பிரிவிலும் புகாரளிக்கப்பட்டிருக்கின்றன. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் யூ-டியூப் சேனலில் நிர்வாகி மதன், தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வீடியோ பதிவு செய்திருக்கிறார். சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன. பி.எஸ்.பி.பி பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிகளைத் தொடர்ந்து யூ-டியூப் சேனல் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. எனவே ஆன்லைனில் மூழ்கி இருக்கும் குழந்தைகளை பெற்றோரகள் கண்காணிக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு