Published:Updated:

குமரி: போலீஸ் மிரட்டியதாக இளைஞர் விஷம் குடித்துத் தற்கொலை - இன்ஸ்பெக்டர் மீது புகார்!

தற்கொலை செய்துகொண்ட வினிஸ்

பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரியும், காவலர் ஒருவரும் பணியின்போது அசந்து தூங்கும் வீடியோ ஒன்றை வினிஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

குமரி: போலீஸ் மிரட்டியதாக இளைஞர் விஷம் குடித்துத் தற்கொலை - இன்ஸ்பெக்டர் மீது புகார்!

பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரியும், காவலர் ஒருவரும் பணியின்போது அசந்து தூங்கும் வீடியோ ஒன்றை வினிஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
தற்கொலை செய்துகொண்ட வினிஸ்

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி மேலரத வீதியைச் சேர்ந்தவர் வினிஸ். உள்ளூரில் கேபிள் டி.வி ஆபரேட்டராக இருந்துவந்திருக்கிறார். இந்நிலையில் தொழில்ரீதியாகச் சிலருடன் முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. 2017-ல் பூதப்பாண்டியில் நடந்த கொலைச் சம்பவம் ஒன்றில் தொடர்பிருப்பதாக அந்தச் சமயத்தில் வினிஸ் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் கேபிள் டி.வி தொடர்பான பிரச்னை ஒன்றில் வினிஸ் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட வினிஸ் கடந்த 5-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் சாட்சிகளை மிரட்டுவதாகக் கூறி, மற்றொரு வழக்கில் வினிஸை பூதப்பாண்டி போலீஸார் கைதுசெய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த வினிஸ், நெல்லை மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்திருக்கிறார்.

கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்த தாய்
கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்த தாய்

இந்நிலையில் ஒருபுறம் பூதப்பாண்டி போலீஸார் மிரட்டுவதாகவும், மற்றொருபுறம் வழக்கறிஞர் மிரட்டுவதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனக் கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆற்றின் கரையோரமாக விஷம் குடித்து வினிஸ் தற்கொலை செய்திருக்கிறார். வினிஸ் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வினிஸின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது வினிஸின் தாய் உஷா மயங்கி விழுந்ததால், அவரை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து போலிஸார் வலுக்கட்டாயமாகத் தூக்கி வெளியேற்ற முயன்றதால் ஊர் மக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மயங்கிய வினிஸின் தாய்
மயங்கிய வினிஸின் தாய்

பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரியும், காவலர் ஒருவரும் பணியின்போது அசந்து தூங்கும் வீடியோ ஒன்றை வினிஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன்னைக் காவலர்கள் மிரட்டுவதாக வினிஸ் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராஜ் மீது வினிஸின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.