Published:Updated:

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் திருட்டு!

விக்ராந்த் போர்க்கப்பல்
பிரீமியம் ஸ்டோரி
விக்ராந்த் போர்க்கப்பல்

தொழில் போட்டியா... தேசத்துக்கு எதிரான சதியா?

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் திருட்டு!

தொழில் போட்டியா... தேசத்துக்கு எதிரான சதியா?

Published:Updated:
விக்ராந்த் போர்க்கப்பல்
பிரீமியம் ஸ்டோரி
விக்ராந்த் போர்க்கப்பல்

ரபரப்பான கொச்சின் கப்பல் கட்டுமானக் குழுமத்தில் பெருங்கனவுடன் தயாரிக்கப்பட்டுவருகிறது, `ஐ.என்.எஸ் விக்ராந்த்’ கப்பல். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் வரிசையில், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான `ஐ.என்.எஸ் விக்ராந்த்’ தயாரிக்கப்படுவது பெருமைமிகு விஷயமாகப் பார்க்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், அந்தக் கப்பலிலிருந்து ஹார்டு டிஸ்குகள், சி.பி.யூ, கணினி ஆகியவை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற பெயரில் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் ஏற்கெனவே இருந்தது. அது பயன்பாட்டில் இருந்து நீக்கப் பட்ட பின்னர், அதே பெயரிலான விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கும் பணி, கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 2013-ம் ஆண்டு தரைதளத்தில் இருந்து கடலில் இறக்கப் பட்டது. தற்போது 95 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன. 2021-ம் ஆண்டு கப்பல் படைக்குச் சமர்ப்பித்து, 2023-ம் ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும்வகையில் பணிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், கப்பலின் செயல் திட்டத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோதுதான், ஹார்டு டிஸ்குகள், கம்ப்யூட்டர், ரேண்டம் ஆக்சஸ் மெமரி, புராசஸர் ஆகியவை மாயமான அதிர்ச்சித் தகவல் வெளியானது. கொச்சின் கட்டுமானக் குழுமம் தரப்பில், போலீஸில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடந்தது என்னவென்று, கொச்சின் கப்பல் கட்டுமானக் குழுமம், கேரள போலீஸ், கப்பல் படை எனப் பல்வேறு தரப்புகளிலும் விசாரித்தோம்.

‘‘செப்டம்பர் 16-ம் தேதி கப்பலின் செயல் திட்டம் குறித்து சோதனை செய்தபோதுதான் விஷயம் தெரியவந்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரையிலான காலகட்டத்திலேயே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக் கின்றனர். இந்த ஹார்டு டிஸ்குகளில்தான், கப்பலின் வரைபடம், ஆயுதங்கள் வைக்கும் விவரங்கள் போன்றவை இருந்தனவாம்.

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் திருட்டு!

கொச்சின் கப்பல் கட்டுமானக் குழுமத்தைப் பொறுத்தவரை, உச்சக்கட்டப் பாதுகாப்பில் இயங்கிவருகிறது. வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. ஐ.டி கார்டு, பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக, விக்ராந்த் கப்பலுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை, பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் திருட்டு!

இதுதவிர, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 82 செக்யூரிட்டிகளும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள் ளனர். விக்ராந்த் கப்பலில் சுமார் 1,400 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், பெரும்பாலானோர் வட இந்தியர்கள்தாம். தற்போது இந்த இரண்டு தரப்பினர்மீதுதான் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. முதல்கட்டமாக, அதில் 52 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டுள்ளனர். அவர்களில் பலரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மொழிப் பிரச்னை காரணமாக விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா இல்லாததும் பெரும் பின்னடைவாக உள்ளது. இதனால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. எப்படிப் பார்த்தாலும், உள்ளே இருக்கும் நபர்கள் மூலம்தான் சம்பவம் நடந்திருக்கும். விஷயம் பூதாகரமாகியுள்ளதால், சிறப்பு போலீஸ் படை, ராணுவம், உளவுத்துறை, கொச்சின் கப்பல் கட்டுமானக் குழுமம் தனிக்குழு எனப் பல்வேறு தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் போலீஸில் சிலரோ, ‘‘பல தனியார் கப்பல் தயாரிப்பு நிறுவனங் களுடன் போட்டி போட்டுத்தான், கொச்சின் கப்பல் கட்டுமானக் குழுமம் ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் எடுத்துவருகிறது. ஐ.என்.எஸ் விக்ராந்த் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து விட்டால், கொச்சின் கப்பல் கட்டுமானக் குழுமத்துக்கு அடுத்தடுத்து பெரிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. எனவே, தொழில் போட்டி காரணமாகவும் இப்படி ஒரு சதி நடந்திருக்கலாம்” என்கின்றனர்.

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் திருட்டு!

கொச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் பூங்குழலி, ‘‘இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர்தான் ஹார்டு டிஸ்கைப் பராமரித்து வருகின்றனர். அதுகுறித்து முழுமையான விவரம் அவர்களுக்குத்தான் தெரியும். அவர்களை இங்கே வரச் சொல்லியிருக்கிறோம். முதல்கட்ட விசாரணையில், அதில் டம்மி சாஃப்ட்வேர் இருந்ததாகவும், சென்ஸிட்டிவான விஷயம் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. கப்பலின் உள்ளே, யார் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். இதனால், அங்கு பணியாற்றுபவர்கள் தான் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என நம்புகிறோம். கப்பலில் பணியாற்றும், அனைவரின் கைரேகைகளையும் எடுத்துள்ளோம். சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்த பிறகுதான், தேசத்துக்கு எதிராகச் சதிசெய்ய இப்படிச் செய்தார்களா அல்லது வேறு காரணம் இருக்கிறதா எனத் தெரியவரும்’’ என்றார்.

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் திருட்டு!

இந்தச் சம்பவம் தொடர்பாக, கப்பல் படையோ, கொச்சின் கப்பல் கட்டுமானக் குழுமமோ நேரடியாக எந்த விளக்கமும் தரவில்லை. கொச்சின் கப்பல் கட்டுமானக் குழுமத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், ‘‘திருடுபோயுள்ள ஹார்டு டிஸ்கில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சேதக் கட்டுப்பாடு போன்ற விவரங்களின் டம்மி மட்டுமே இருந்தது. சோதனைப் பணிகள் நடப்ப தால், அதில் எந்த முக்கிய தகவல்களும் இல்லை. அவை எல்லாமே சந்தையில் எளிதில் கிடைக்கும் விஷயங்கள்தான்” என்றார்.

நாட்டின் பாதுகாப்புக்காக 20,000 கோடி ரூபாய் செலவில் தயாராகிவரும் போர்க்கப்பலில் பொருள்கள் திருடுபோவதையும், அதில் ஒரு சி.சி.டி.வி கேமராகூட இல்லை என்பதையும் எளிதாகக் கடந்து செல்ல முடியாது. நாட்டின் பாதுகாப்பைப் பற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள், இந்த அலட்சியத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism