Published:Updated:

ஆர்யன் கான் கைது: நடிகர் ஷாருக் கானை மிரட்டிப் பணம் பறிக்கச் சதியா? - வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

ஆர்யன் கான் விவகாரத்தில் நடிகர் ஷாருக் கானை மிரட்டிப் பணம் பறிக்க, குற்றவாளிகள் சதித்திட்டம் தீட்டியதாகப் புதிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆர்யன் கானைக் கைதுசெய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வாங்கடேமீது அடுக்கடுக்கான புகார்கள் சுமத்தப்பட்டுவருகின்றன. இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்ட பாஜக-வைச் சேர்ந்த மனிஷ் பனுசாலி, தனியார் துப்பறியும் நிபுணர் கொசாவி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொசாவி, ஷாருக் கான் மகனை விடுவிக்க ஷாருக் கானின் மேலாளர் பூஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பணம் கைமாறியதாகவும் கொசாவியின் பாதுகாவலர் பிரபாகர் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது மேலும் ஒரு திருப்பமாக கொசாவியும், மனிஷ் பனுசாலியும் சேர்ந்து ஷாருக் கானை மிரட்டி பணம் பறிக்க சதி செய்ததாக கனிஷ் ஜெயந்த் என்ற வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளை கார்; கைமாறிய ரூ.38 லட்சம்  ஆர்யன்கானுக்காக ரூ.18 கோடி பேரமா?
ஷாருக் கான்
ஷாருக் கான்

இது தொடர்பாக கனிஷ் ஜெயந்த் போலீஸில் அளித்துள்ள புகாரில், `கொசாவியும், மனிஷ் பனுசாலியும் சேர்ந்து ஷாருக் கானை மிரட்டிப் பணம் பறிக்க சதி செய்திருக்கின்றனர். அவர்களுக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் சதி செய்து ஆர்யனை கைதுசெய்திருக்கின்றனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நினைத்திருந்தால் இந்த வழக்கில் அரசு ஊழியர்கள் சிலரை சாட்சியாகச் சேர்த்திருக்கலாம். ஆனால் போலீஸாரால் தேடப்படும் கொசாவியைச் சாட்சியாக சேர்த்திருக்கின்றனர். இது அதிகார துஷ்பிரயோகம். கொசாவியின் பாதுகாவலர் பிரபாகரும் இதே குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார்.

இது முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்த விவகாரத்தைத் திசைதிருப்ப கொசாவியும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் சேர்ந்து மேற்கொண்ட முயற்சி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். வழக்கறிஞர் தனது புகாரில் `கொசாவி, மனிஷ் மட்டுமல்லாமல், ரிஷபா சச்சிதேவ், அமிர் ஃபர்னிச்சர்வாலா, பிரதிகா ஆகியோரும் இந்தச் சதியில் ஈடுபட்டதாகவும், கொசாவி மனிஷ் பனுசாலியுடன் சேர்ந்து இந்தச் சதியில் ஈடுபட்டார்' எனவும் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே சமீர் வாங்கடே, ``தன்மீது போலியான புகாரளிக்க சிலர் முயல்வதாகவும், அதிலிருந்து தனக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்று மும்பை போலீஸ் கமிஷனரிடம் கேட்டிருக்கிறார். ஏற்கெனவே தன்னை சிலர் உளவு பார்ப்பதாக சமீர் வாங்கடே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு