Published:Updated:

ஆவடி: தலைக்கேறிய மது போதை; பணத் தகராறில் கொத்தனார் அடித்துக் கொலை!

கொலை
News
கொலை

சென்னை, ஆவடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் கொலைசெய்யப்பட்டார்.

சென்னை ஆவடி, ஆனந்தா நகரைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் (51), பூபதி (29). இருவரும் கொத்தனார் வேலை பார்த்துவந்தனர். 7.12.2021-ம் தேதி இரவு சிவக்குமாரும் பூபதியும் ஆனந்தா நகர் பகுதியில் மது அருந்தியிருக்கின்றனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில், ஆத்திரமடைந்த பூபதி, இரும்பு ராடால் சிவக்குமாரைத் தாக்கியிருக்கிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

அதில், ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் சரிந்தார். அதைக் கண்ட பூபதி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்குப் போராடிய சிவக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் சிவக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து ஆவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து பூபதியைத் தேடிவந்தனர். இந்த நிலையில், பூபதியை போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் மது போதையில் இருவரும் இருந்தபோது அவர்களுக்குள் பணத் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அதன் காரணமாக சிவக்குமாரை பூபதி கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்ட பூபதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz