சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மார்ட்டின் என்பவர் ஸ்ரீவைகுண்டம் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டபோது, போலீஸார் தன்னைத் தாக்கியதாகப் புகாரளித்தார். இதனால், மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள் சாத்தான்குளம் போலீஸார்.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மார்ட்டினிடம் பேசினோம். ‘‘எங்க பகுதியில உள்ள மைதீன்மீரானிடம் வாங்கின கடனுக்கு, நான் நாலு மாசமா வட்டி கொடுக்கலை. அதனால மீரானின் மைத்துனர் பாபுசுல்தான் எனக்கு போன் பண்ணி பணத்தைக் கேட்டார். கடன் கொடுத்தவருக்கு பதிலா அவரோட உறவினர் கேட்டதால, ‘அதை ஏன் நீங்க கேக்குறீங்க’னு நான் கேட்டேன். அதுல அவங்களுக்குக் கோவம். அதனால, போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்க.

ஆகஸ்டு 23-ம் தேதி, என்னைக் கூட்டிட்டுப் போன போலீஸ், காவலர் குடியிருப்புக்குள்ள ஒரு வீட்டுலவெச்சு அடிச்சாங்க. அந்த நேரத்துல ‘ஜட்ஜ் வந்துருக்கார்’னு ஒரு போலீஸ் வந்து தகவல் சொல்லவும், ‘இவனை இடம் மாத்துங்க’னு சொல்லிட்டு இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் கிளம்பிட்டார். அங்கே இருந்த போலீஸ்காரங்க என்னைத் தரதரனு பக்கத்துல இருந்த புதர்ப்பகுதிக்கு இழுத்துட்டுப் போனப்போ, ரெண்டு கால் முட்டியிலயும் காயமாயிடுச்சு.

என்னை மறுநாள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகக் கூட்டிட்டுப் போனாங்க. சிறுநீர் கழிக்க முட்டியலைனு டாக்டர்கிட்ட சொன்னதால, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மூணு நாள் சிகிச்சை கொடுத்தாங்க. ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்துல என்னை ஆஜர்படுத்தினப்போ போலீஸ் அடிச்சதைச் சொல்லி காயத்தையும் காட்டினேன். இப்போ ஜாமீன்ல விட்டுருக்காங்க’’ என்றார்.

மார்ட்டினின் வழக்கறிஞர் சுரேஷிடம் பேசினோம், “மார்ட்டினைக் காவலர் குடியிருப்புக்குக் கூட்டிட்டுப் போனதா அவரோட தம்பி பொன்பாண்டி கொடுத்த தகவல் அடிப்படையில, சாத்தான்குளம் நீதிமன்ற நீதிபதி சரவணன் கிட்ட மனு கொடுத்தோம். உடனே நீதிபதி ஸ்டேஷனுக்கு நேர்ல வந்து விசாரிச்சப்போ, ‘மார்ட்டினை இன்னும் கைது செய்யலை. தேடிட்டுதான் இருக்கோம்’னு இன்ஸ்பெக்டர் சமாளிச்சார். பஜார்லவெச்சு மறுநாள் அரெஸ்ட் பண்ணினதா எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க. ‘ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போகாம காவலர் குடியிருப்புக்குக் கூட்டிட்டுப் போய் எதுக்காக விசாரணை செய்யணும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மாவட்ட எஸ்.பி-யான ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘‘போலீஸாரைப் பார்த்து மார்ட்டின் ஓடியபோது கீழே விழுந்ததால், முட்டிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மார்ட்டின்மீது நான்கு அடிதடி வழக்குகள், இரண்டு கொலை மிரட்டல் வழக்குகள், மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு என எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட ஒருவரை எங்கு வேண்டு மானாலும் வைத்து விசாரிக்கலாம். போலீஸார் அவரை அடித்துத் துன்புறுத்தவில்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே போலீஸார்மீது மார்ட்டின் அவதூறு பரப்புகிறார்’’ என்றார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அறக்கட்டளை சார்பாக, ‘மார்ட்டினை சட்டவிரோதமாகத் தாக்கிய போலீஸார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும், எஸ்.டி.பி.ஐ மற்றும் பனங்காட்டுப்படை கட்சிகள் சார்பாக, ‘பாபுசுல்தானுக்குக் கொலை மிரட்டல் விடுத்த மார்ட்டினைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ எனவும்

எஸ்.பி-யிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அரசியல் கட்சிகளின் தலையீட்டால் பரபரத்துகிடக்கிறது சாத்தான்குளம்.

தந்தை, மகன் என இரண்டு உயிர்களின்மீது எழுப்பப்பட்டுள்ள மனித உரிமை எனும், ‘அதிகாரத்துக்கு எதிரான கவசத்தை’ குற்றவாளிகள் பயன்படுத்திக்கொண்டுவிடக் கூடாது!