Published:Updated:

தாதா அங்கொட லொக்கா: `போலீஸுக்கு மிரட்டல்; பிளாஸ்டிக் சர்ஜரி’ - இலங்கையின் சந்தேகங்கள்

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா

இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கு தொடர்பாக அந்த நாட்டுக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்த செய்தி.

இலங்கை நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் மாஃபியா என்று மோஸ்ட் வான்டட் குற்றவாளியாக வலம் வந்தவர். கழுகு மூலம் போதைப்பொருள் கடத்தும் வழக்கத்தைக் கொண்டவர். இலங்கையில் கேங்ஸ்டர் வாரில், போலீஸ் வாகனத்தில் சென்ற எதிரணியினர் 7 பேரை கொன்றுவிட்டு இந்தியா தப்பிவிட்டார். சட்டவிரோதமாக இந்தியா வந்த லொக்காவுக்கு, வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, திருப்பூர் தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா

இந்தியா வந்த லொக்கா பெங்களூரு, சென்னை, கோவை, மதுரை என்று பல்வேறு பகுதிகளில் சுற்றியுள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு சேரன்மாநகர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.

Money... Money... Money; வசூல் முதல் கொலை வரை..! - ஆன்லைனில் டீல் செய்த இலங்கை தாதா

இலங்கை கொழும்புவைச் சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண் அவரை அடிக்கடி வந்து பார்த்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கோவை வந்த அவர், ஊரடங்கு காரணமாகத் திரும்பி இலங்கை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதனிடையே, அங்கொட லொக்காவுக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அமானி தான்ஜி
அமானி தான்ஜி

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனை மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்காக மதுரை சிவகாமசுந்தரி ஆதார் கார்டு கொடுத்திருந்தார். அதில், அவரது பெயர் பிரதீப்சிங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து விசாரித்ததில், அந்த ஆதார் போலி என்று தெரியவந்தது. மேலும், இந்தியாவில் இறந்த இலங்கை தாதா ஒருவர் குறித்து விசாரிக்க வேண்டுமென அந்நாட்டில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகுதான், உயிரிழந்தது பிரதீப்சிங் இல்லை, அங்கொட லொக்கா என்று தெரியவந்துள்ளது. அவருடன் இருந்த அமானி தான்ஜி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கடும் மன உளைச்சலில் இருந்த அவர், கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.

லொக்காவுக்கு உதவிய சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் கோவை மத்திய சிறையிலும், அமானி தான்ஜி சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி-யில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவையில் உயிரிழந்த உடலை எதற்காக, மதுரை வரை எடுத்துச் சென்று எரியூட்ட வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. லொக்காவின் மரணத்தை இலங்கை போலீஸ் உறுதிப்படுத்தவில்லை. லொக்கா கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மறுபுறம் அவரே தான் இறந்ததுபோல நாடகமாடி இலங்கை திரும்ப திட்டம் போட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. “எப்போதேல்லாம் லொக்காவுக்கு இலங்கையில் நுழைய முடியாதபடி நெருக்கடி வருகிறதோ,

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா

அப்போதேல்லாம் இப்படி இறப்பு நாடகம் போட்டு உள்ளே முயற்சி செய்வார்” என்று இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில், கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன்னுயை தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார் லொக்கா.

லொக்கா, இந்தியாவில் இருந்தாலும் ஆன்லைன் மூலம் தனது கேங்ஸ்டர் நெட்வொர்க்கை இயக்கி வந்துள்ளார். 2017-ம் ஆண்டு அவரது கூட்டாளிகள் வணிகர்களை மிரட்டி பணம் வசூல் செய்துள்ளனர். இதை ஒரு இலங்கை போலீஸ் தடுத்துள்ளார். அப்போது, சென்னையில் இருந்த அங்கொட லொக்கா, செல்போன் மூலம் அந்த போலீஸ்க்கு அழைத்து, “என் ஆளை தடுக்காதே” என்று மிரட்டியுள்ளார். லொக்காவை பிடிக்கச் சொல்லி இன்டர்போலும் ரெட் நோட்டீஸ் விட்டுள்ளது.

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா

அப்படி இருந்தும், லொக்காவை யாரும் நெருங்க முடியவில்லை. எனவே தான், அவரது மரணத்தின் மீது இலங்கை தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறது. இந்தச் சர்ச்சைகளுக்கு பிரேதப் பரிசோதனை மற்றும் டி.என்.ஏ சோதனைதான் முடிவு தரும்.

அடுத்த கட்டுரைக்கு