Published:Updated:

புதுக்கோட்டை: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்
புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்

வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூலங்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் உறவினர் கார்த்திக் (28) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்தனர். கடந்த 2018-ல் நடந்த இந்தச் சம்பவம் குறித்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

குற்றவாளி கார்த்திக்
குற்றவாளி கார்த்திக்

இந்தநிலையில், வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். அபராதத்தைக் கட்டத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திக் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னமராவதி பகுதியில் 9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு