Published:Updated:

சென்னை: மனைவி மீதான சந்தேகத்தால் நடந்த கொலை - கணவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் கைதான காசிவிஸ்வநாதன்

சென்னையில் மனைவி மீதான சந்தேகத்தால் அவரைக் கொலைசெய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மனைவி மீதான சந்தேகத்தால் நடந்த கொலை - கணவருக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் மனைவி மீதான சந்தேகத்தால் அவரைக் கொலைசெய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
கொலை வழக்கில் கைதான காசிவிஸ்வநாதன்

சென்னை ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகர் 20-வது தெருவைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (42). இவரின் மனைவி சாந்தகுமாரி (24). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில் கடந்த 14.11.2011-ம் ஆண்டு சாந்தகுமாரிக்கும் காசிவிஸ்வநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவிமீது சந்தேகப்பட்ட காசி விஸ்வநாதன், ஆத்திரமடைந்து சாந்தகுமாரியைக் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த சாந்தகுமாரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொலை
கொலை

இது குறித்துத் தகவலறிந்த ஆதம்பாக்கம் போலீஸார், காசிவிஸ்வநாதன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சூழலில் சிகிச்சையிலிருந்த சாந்தகுமாரி உயிரிழந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்டம், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதிமன்றத்தில் ஆதம்பாக்கம் போலீஸார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும் வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்துவந்தனர். வழக்கு விசாரணை முடிந்து 13.4.2022-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரி காசிவிஸ்வநாதன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிப்பட்டது.

தீர்ப்பு
தீர்ப்பு

இந்த வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்து காசி விஸ்வநாதனுக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்த போலீஸாரை வெகுவாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism