Published:Updated:

ராமநாதபுரம்: குடும்பத் தகராறு; தலைக்கேறிய போதை... தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கூலித் தொழிலாளி!

தீக்குளித்து தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

ராமநாதபுரம் காசுக்கடை பஜார் பகுதியில் மது போதையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராமநாதபுரம்: குடும்பத் தகராறு; தலைக்கேறிய போதை... தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கூலித் தொழிலாளி!

ராமநாதபுரம் காசுக்கடை பஜார் பகுதியில் மது போதையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Published:Updated:
தீக்குளித்து தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

ராமநாதபுரம், தங்கப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (56). இவர் லோடு சைக்கிள் ஓட்டி பிழைப்பு நடத்திவந்திருக்கிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், குடிக்கு அடிமையான இவர் தினமும் குடித்துவிட்டு மனைவி, பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

மேலும், அடிக்கடி குடும்பத்தினருடன் சண்டையிட்டு வீட்டில் தங்காமல் சாலையோரங்களில் தங்கிவருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ரவி வயிற்றுவலி ஏற்பட்டு கடந்த இரு தினங்களாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். அவரை கவனித்துவந்த அவர் மனைவி, பிள்ளைகள் இனி குடிக்கக் கூடாது என சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை
சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை

இந்தச் சூழலில், இன்று அதிகாலை மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் ராமநாதபுரம் காசுக்கடை பஜார் கடைவீதிக்கு மது போதையில் பெட்ரோல் கேனுடன் வந்திருக்கிறார் ரவி. பின்னர், உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சாலையோரம் வீடு கட்டுவதற்காக குவித்துவைக்கப்பட்டிருந்த மணலை அள்ளி அவர் உடல்மீது வீசி தீயை அணைத்திருக்கின்றனர்.

இருந்தும், 90 சதவிகிதம் தீக்காயம் அடைந்தநிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ரவி. தகவலறிந்து அங்கு வந்த பஜார் போலீஸார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி
தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

இந்தச் சம்பவத்தால் கடைவீதி முழுவதுமே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்தனர்.

அதிகாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.