Published:Updated:

சென்னை: அத்தை மகளைத் திருமணம் செய்த போலீஸ்காரர்! - போக்சோவில் கைதான பின்னணி

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்

அத்தை மகளான 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக வந்தப் புகாரின்பேரில் போலீஸ்காரர் பழனிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா நெடுங்குளம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிகுமார் (27). இவர் காவலராக சென்னையில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மே மாதம் 17-ம் தேதி சமயநல்லூரில் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.

திருமணம்
திருமணம்

இந்தநிலையில் பழனிகுமார், திருமணம் செய்த மணப்பெண்ணுக்கு 17 வயது என குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அதுதொடர்பான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூகநல அலுவலர் ரேவதி, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணகி, வழக்குப்பதிவு செய்து காவலர் பழனிகுமாரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மாதவரம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், கைதான பழனிகுமார், கடந்த 2016-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவலராகப் பணிக்குச் சேர்ந்தார். ஆயுதப்படையில் மோட்டார் வாகனப்பிரிவில் பணியாற்றிய இவர், 11.1.2021-ல் காவல் நிலைய பணிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பழனிகுமார் பணியாற்றி வருகிறார்.

`காதலனை நம்ப வைத்தால் திருமணம்’ - குழந்தை கடத்தல் விவகாரத்தில் திருப்பத்தூரைப் பதறவைத்த இளம்பெண்
குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்
representational image

10.5.2021-ம் தேதி முதல் 29.5.2021 வரை மருத்துவ விடுப்பில் காவலர் பழனிகுமார் சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு தன்னுடைய அத்தை மகளான 17 வயது சிறுமியை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்திருக்கிறார். பின்னர் மருத்துவ விடுப்பு முடிந்து 30-ம் தேதி பணியில் சேர்ந்திருக்கிறார். சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்புக்கு வந்த தகவலின்படி விசாரணை நடத்தி காவலர் பழனிகுமார் மீது குழந்தைகள் திருமண தடைச்சட்டம், போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்திருக்கிறோம் சிறுமியையும் மீட்டு குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்திருக்கிறோம்" என்றனர்.

காவலர் ஒருவரே சிறுமியைத் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு