Published:Updated:

முதல்நாள் விருது... அடுத்த நாள் அவப்பெயர்! - ரூ.17,000-க்கு ஆசைப்பட்டு நேர்மையை தொலைத்த போலீஸ்!

கலிலுல்லா.ச

உழைப்புக்காகவும், நேர்மைக்காகவும், `சிறந்த காவலர்’ விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. விருது கொடுக்கப்பட்டு, 24 மணி நேரத்திலே லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டார்.

constable
constable ( NDTV )

தெலங்கானாவில் உள்ள மெஹபூப்நகர் ஐடவுன் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் பல்லே திருப்பதி ரெட்டி. இவரது பணியை பாராட்டி விருது கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சுதந்தர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி டிஎஸ்பி ரேமா ராஜேஸ்வரி முன்னிலையில், அமைச்சர் ஸ்ரீனிவாஸ், `சிறந்த காவலர்’ விருதை வழங்கி கௌரவித்தார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

award received
award received

அங்குள்ள பத்திரிகைகளில் செய்தியாகி பாராட்டுகளைப் பெற்றார் பல்லே திருப்பதி ரெட்டி. அதற்கு அடுத்த நாளே மீண்டும் அவரைப்பற்றிய செய்தி வெளியானது. ஆனால், இம்முறை சின்ன மாற்றம். ரமேஷ் என்பவரிடம் 17,000 ரூபாய் லஞ்சமாக வாங்கியபோது, ஊழல் தடுப்புப் பிரிவினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

`உனக்கெதிராக வழக்கு போடக் கூடாது என்றால், 17,000 ரூபாய் கொடு’ என்று மிரட்டி பணம் வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ரமேஷ், ``சரியான ஆவணங்களை வைத்துக்கொண்டு மணலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு சென்றுகொண்டிருந்தேன்.

police
police

காவலர்கள் பணம் கொடுக்குமாறு என்னை லஞ்சம் கொடுக்கச் சொல்லி தொந்தரவு செய்தனர்” என்று தெரிவித்துள்ளார். பணத்தை வாங்கி பையில் வைத்தபோது, ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். விருது வாங்கிய அடுத்த நாளே, காவலர் லஞ்சம் வாங்கி கைதானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.