Published:Updated:

நெல்லை: காவல் நிலையம் வந்த காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்! - மூவரைக் கைதுசெய்த போலீஸ்

காதலர்கள் தஞ்சமடைந்த பேட்டை காவல் நிலையம்
காதலர்கள் தஞ்சமடைந்த பேட்டை காவல் நிலையம்

காதல் திருமணம் செய்ததால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சிய காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். ஆனாலும் அவர்களுக்குக் கத்திக் குத்து விழுந்தது.

நெல்லை டவுன், கோடிஸ்வரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். பொறியியல் பட்டதாரியான அவர் தனியார் வங்கியில் பணிபுரிந்துவருகிறார். அவரும், நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவரும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததும் எதிர்ப்பு கிளம்பியது.

காதல் திருமணம்
காதல் திருமணம்

ஆனந்தராஜும் ரம்யாவும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள், காதலர்களைக் கண்டித்துள்ளனர். ஆனாலும் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, நெல்லை ராமையன்பட்டி பகுதியிலுள்ள விநாயகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் செய்துகொண்ட இருவரையும் பெண் வீட்டார் தேடிவந்தனர். அதனால் பெற்றோரால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என ஆனந்தராஜ் , ரம்யா தம்பதியர் அச்சமடைந்தனர். அதனால் இருவரும் நெல்லை பேட்டையிலுள்ள காவல் நிலையத்துக்குச் சென்று தங்களுக்குப் பாதுகாப்பு கோரினார்கள்.

திருமணம்
திருமணம்

காதல் திருமணம் செய்த தங்களைப் பெற்றோர் தேடிவருவதால், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது தொடர்பாக பேட்டை காவல் ஆய்வாளர் இரு குடும்பத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரம்யாவை தங்களுடன் வருமாறு பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தினார்கள். ஆனால், ரம்யா அவர்களுடன் செல்ல மறுத்ததுடன், கணவருடன் செல்வதாக போலீஸாரிடம் தெரிவித்தார். அதனால் ரம்யாவின் பெற்றோர் ஆத்திரத்துடன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களுடன் மீண்டும் வருமாறு வலியுறுத்தினார்கள்.

காதலர்கள் தஞ்சமடைந்த பேட்டை காவல் நிலையம்
காதலர்கள் தஞ்சமடைந்த பேட்டை காவல் நிலையம்

ரம்யா தங்களுடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவரின் சகோதரர் ராம்குமார் என்பவர், காவல் நிலையத்தின் உள்ளே வைத்து கத்தியால் ரம்யாவைக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீண்டும் ராம்குமார் குத்த முயன்றார். அதைத் தடுத்த கணவர் ஆனந்தராஜுக்கும் கத்திக் குத்து விழுந்தது.

`12.30 மணிக்கு கொலை முயற்சி; 2.30 மணிக்கு கொலை!’ -  அடுத்தடுத்த குற்றங்களை அரங்கேற்றிய கும்பல்

கத்திக் குத்தால் காயமடைந்த இருவருக்கும் பேட்டை காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

காதலர்களை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய ராம்குமாரையும் அவருடன் வந்த மூவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரம்யாவின் தந்தை கல்யாணசுந்தரம், சகோதரர் ராம்குமார், ராம்குமாரின் நண்பர் விமல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

கத்திக் குத்து
கத்திக் குத்து

பாதுகாப்பு கோரி காவல் நிலையத்துக்கு வந்தவர்கள் மீது போலீஸார் முன்னிலையிலேயே கத்திக் குத்து விழுந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: கொலை வழக்கில் தொடர்பு! -குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் சிறையிலடைப்பு
அடுத்த கட்டுரைக்கு