Published:Updated:

குமரி: காதலர்கள் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்ட ஜோடி... கொடிமரத்தில் கட்டிவைத்த பொதுமக்கள்!

பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையடிக்கும் ஜோடி

``இவர்கள் இருவரும் ஐந்தாறு ஆண்டுகளாக ஒன்றாகச் சேர்ந்து காதல் ஜோடி என்ற போர்வையில் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். அவர்கள் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர்" என்கிறார்கள் போலீஸார்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வீடுகள் மற்றும் ஆலயங்களில் திருட்டு எனக் கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இதனால் தக்கலை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தக்கலை அருகே உள்ள ஆர்.சி.தெருவில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு ஜோடி அங்கும் இங்கும் சென்றுள்ளது. சிறிது நேரம் அவர்களை கவனித்த தெருவாசிகள், தங்களுக்குள் பேசி ஒன்று திரண்டு அந்த ஜோடியைப் பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர்கள், ``நாங்கள் காதலர்கள்' என பதில் கூறியுள்ளனர். அவர்களது பதிலை ஏற்றுக்கொள்ளாத தெரு மக்கள் அவர்களை சரமாரியாகத் தாக்கினர்.

காதலர்கள் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுட்டவர்
காதலர்கள் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுட்டவர்

மேலும் அவர்களை சர்ச் கொடிமரத்தில் கட்டிவைத்துள்ளனர். இது பற்றித் தகவல் கிடைத்ததால் அந்தப் பகுதிக்கு போலீஸார் சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், கொடிமரத்தடியில் கட்டிவைக்கப்பட்டிருந்த அந்த ஜோடியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாபு மோன், நூர்ஜகான் எனத் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், "ஷாபு மோன் (42) கருங்கல் அருகே கப்பியறைப் பகுதியைச் சேர்ந்தவர். நூர் ஜகான் (35) அழகியபாண்டிபுரத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஐந்தாறு ஆண்டுகளாக ஒன்றாகச் சேர்ந்து காதல் ஜோடி என்ற போர்வையில் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். அவர்கள் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். என்ன திட்டத்துடன் சுற்றித்திரிந்தனர் எனத் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism