Published:Updated:

பள்ளிக்குச் சென்று திரும்பிய மகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி! - திருவள்ளூரில் சோகம்

தற்கொலை

திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் தொழிலாளியாகப் பணியாற்றும் ஒருவர் தன் மனைவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளிக்குச் சென்று திரும்பிய மகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி! - திருவள்ளூரில் சோகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் தொழிலாளியாகப் பணியாற்றும் ஒருவர் தன் மனைவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகிலுள்ள கீழ் நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் அர்ச்சனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிருக்கு 14 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். வடிவேல், ரேவதி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். வடிவேல், ரேவதி தம்பதியருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். வடிவேலு, தன் முதல் மனைவியைப் பிரிந்து தற்போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்துவந்துள்ளார்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

வடிவேல் தனியார் நிறுவனத்தில் காவல் பணியாளராக வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல ரேவதியின் மகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் வராண்டாவில் ரேவதியும், வீட்டின் அறையினுள் வடிவேலுவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு கதறி அழுதிருக்கிறார். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் கூறப்பட்டது. தகவலறிந்து வந்த மணவாளநகர் காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இருவரும் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், வடிவேலுக்கும் ரேவதிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

தற்கொலை
தற்கொலை

மேலும், சமீபத்தில்தான் ரேவதியின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். அதோடு, ரேவதிக்கு ஒரு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார் வடிவேலு. இவர்களின் தற்கொலைக்கு, குடும்பப் பிரச்னை காரணமா இல்லை கடன் தொல்லையா என்பது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். தாய், தந்தை இருவரையும் இழந்து தனியே தவிக்கும் குழந்தை குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism