Published:Updated:

விருதுநகர்: கடன் பெற்றுத் தருவதாக மோசடி; தம்பதியர் விஷம் குடித்துத் தற்கொலை - சிக்கிய கடிதம்

தம்பதியர்

விருதுநகரில் ரூ.5 லட்சம் கடன் பெறுவதற்கு முன்பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த தம்பதியர், விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

விருதுநகர்: கடன் பெற்றுத் தருவதாக மோசடி; தம்பதியர் விஷம் குடித்துத் தற்கொலை - சிக்கிய கடிதம்

விருதுநகரில் ரூ.5 லட்சம் கடன் பெறுவதற்கு முன்பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த தம்பதியர், விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
தம்பதியர்

விருதுநகர், எஸ்.பி.நந்தவனம் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயராஜன் (வயது 41). பெயின்ட் கடை நடத்திவந்தார். இவரின் மனைவி அருணமகாஸ்ரீ (37). இந்த தம்பதியருக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். கார்த்திகேயராஜா, பெயின்ட் வியாபாரம் மட்டுமின்றி சிறிது சிறிதாக டிரேடிங் தொழிலும் செய்துவந்தார். இதுதவிர ஆன்லைனிலும் வியாபாரம் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கார்த்திகேயராஜனுக்கு தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதை ஈடுகட்ட தம்பதியர் இருவரும் கடனாக பணம் பெற முடிவுசெய்திருக்கின்றனர்.

தற்கொலை
தற்கொலை

இந்த நிலையில், தேனி மாவட்டம், சின்னமநல்லூரைச் சேர்ந்த முத்துமகாராஜா என்பவர் அருணமகாஸ்ரீக்கு அறிமுகமாகியிருக்கிறார். கார்த்திகேயராஜனின் தொழில் நஷ்டத்தைச் சரிக்கட்ட ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுத்தருவதாகவும், அதற்கு முன்பணம் வேண்டும் எனவும் முத்துமகாராஜா கூறியிருக்கிறார். இதை நம்பிய கார்த்திகேயராஜன்- அருணமகாஸ்ரீ தம்பதியர், முத்துமகாராஜாவிடம் கணிசமான தொகையை முன்பணமாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வாக்களித்தபடி முத்துமகாராஜா கடன் பெற்றுத்தராமல் இழுத்தடித்திருக்கிறார்.

இதனால், கார்த்திகேயராஜனுக்கும் அருணமகாஸ்ரீக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் கடன் வேண்டாம், வாங்கிய பணத்தைத் திருப்பித் தரும்படி கார்த்திகேயராஜன் தம்பதியர் முத்துமகாராஜாவிடம் பணத்தைக் கேட்டிருக்கின்றனர்.

தற்கொலை
தற்கொலை

ஆனால் அவர் வாங்கிய பணத்தையும் தராமல் தொடர்ந்து ஏமாற்றிவந்திருக்கிறார். தொடர்ந்து, கார்த்திகேயராஜனுடன் செல்போனில் பேசுவதையும் தவிர்த்திருக்கிறார். இதனால், மனமுடைந்த கார்த்திகேயராஜன் தம்பதியர் தற்கொலை செய்துகொள்ள முடிவுவெடுத்ததாகத் தெரிகிறது. இதற்காக கடந்த வெள்ளியன்று இரவு, பிள்ளைகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பி தூங்க வைத்திருக்கின்றனர். பின்னர் நந்தவனத்தெருவிலுள்ள அவர்களுடைய வீட்டில் தம்பதியர் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

குடும்பம்
குடும்பம்

மறுநாள் காலையில் அப்பா, அம்மாவைப் பார்ப்பதற்காக பிள்ளைகள் இருவரும் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்ட நிலையில், வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பதற்றமடைந்த பிள்ளைகள், உறவினர்கள் மூலம் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டினுள் வாய் மற்றும் மூக்கில் நுரைதள்ளிய நிலையில் கார்த்திகேயராஜனும் அருணமகாஸ்ரீயும் இறந்துகிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து உடல்களைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் கார்த்திகேயராஜன் வீட்டின் சோதனை நடத்தினர்.

போலீஸாரின் இந்தச் சோதனையில், கார்த்திகேயராஜன் - அருணமகாஸ்ரீ தம்பதியர் இறப்பதற்கு முன்பாக எழுதிவைத்த தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், முத்துமகாராஜா பணம் பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில், முத்துமகாராஜா மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவரைத் தேடிவந்தனர். இந்த நிலையில், முத்துமகாராஜாவை விருதுநகர் தனிப்படை போலீஸார் நேற்று இரவு கைதுசெய்தனர்.