Published:Updated:

சிலைத் திருட்டு வழக்கு: சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சுபாஷ் சந்திரகபூர்

வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷ் சந்திரகபூர், சஞ்சிவி அசோகன், பாக்கியகுமார் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மாரிச்சாமி, ஸ்ரீராம் (என்கிற) சுலோகு, பார்த்திபன் ஆகிய 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார்.

சிலைத் திருட்டு வழக்கு: சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷ் சந்திரகபூர், சஞ்சிவி அசோகன், பாக்கியகுமார் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மாரிச்சாமி, ஸ்ரீராம் (என்கிற) சுலோகு, பார்த்திபன் ஆகிய 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார்.

Published:Updated:
சுபாஷ் சந்திரகபூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி, வரதராஜபெருமாள் கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு பழமையான 20 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன. இது குறித்து கோயிலில் செயல் அலுவலரான வைகுண்டதாஸ் என்பவர் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

பின்னர், கேரள மாநிலம் காலடி காவல் நிலையத்தில்தேவியுடன் கூடிய விநாயகர் சிலை வைத்திருந்த வழக்கின் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்ட மாரிச்சாமி, ஸ்ரீராம் (என்கிற) சுலோகு, பிச்சுமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தமிழகம் அழைத்து வந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டதில் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 20 சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர்
சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர்

இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அமெரிக்காவில் வசித்து வந்த சுபாஷ் சந்திரகபூர், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சிவி அசோகன், மாரிச்சாமி, பாக்கியகுமார், சுலோகு, பார்த்திபன், பிச்சுமணி ஆகிய 7 பேரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதில் பிச்சுமணி, அப்ரூவராக மாறி பல்வேறு தகவல்களை போலீஸாருக்கு கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, சுபாஷ் சந்திரகபூர், சஞ்சிவி அசோகன், மாரிச்சாமி, பாக்கியகுமார், சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேர் மீதுள்ள வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷ் சந்திரகபூர், சஞ்சிவி அசோகன், பாக்கியகுமார் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மாரிச்சாமி, ஸ்ரீராம் (என்கிற) சுலோகு, பார்த்திபன் ஆகிய 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுபாஷ் சந்திரகபூருக்கு ரூ.4 ஆயிரம், மீதமுள்ள 5 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர், 6 பேரையும் சிறையிலடைத்தனர்.

இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் தரப்பில், ``சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் சந்திரகபூரை இந்த வழக்கிற்காக ஜெர்மனியிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்து கைதுசெய்து விசாரணை மேற்கொண்டோம். இதில் அமெரிக்காவிலிருந்து நான்கு சிலைகள், கேரளாவிலிருந்து ஒரு சிலை என மொத்தம் ஐந்து சிலை மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் வெளிநாட்டை சேர்ந்தவர் உட்பட 40 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை எதிர்த்து வழக்கை திசை திருப்பும் நோக்கில் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வழக்கு விசாரணையை காலதாமதம் செய்தனர். அதனை முறியடித்து திறம்பட வழக்கை நடத்தி நீதிமன்றத்தின் மூலம் தண்டனை உரிய பெற்று தந்திருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.