Published:Updated:

ஈரோடு: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published:Updated:
இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி சாலையிலுள்ள கால்வாய் வீதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ராஜா (34). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவர் உறவினர் வீடு ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற கிடா விருந்தில் பங்கேற்பதற்காக ராஜா பவானி வந்தார்.
அப்போது, உறவினரின் மகளான பிளஸ் ஒன் படிக்கும் 16 வயது மாணவி விருந்து நடந்த வீட்டுக்கு வந்த உறவினரின் குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்காக பக்கத்திலிருந்த தனது வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றார். குழந்தைகளைக் குளிப்பாட்டி அனுப்பிவிட்டு அந்த மாணவி குளியலறைக்குள் சென்றார்.

ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றம்
ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றம்

அப்போது வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு அங்கு வந்த ராஜா, மாணவி இருந்த குளியறைக்குள் புகுந்து அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். `இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னைக் கடத்திப்போய் லாரி ஏற்றிக் கொன்று விடுவேன்!' எனக்கூறி மிரட்டினாராம். இதுபோல இரண்டு முறை மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். விருந்து முடிந்ததும் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப். 4-ம் தேதி மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் தாயார் முற்பட்டார். அப்போதுதான் தன்னை ராஜா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமாக இருப்பதாக மாணவி கூறி கதறி அழுதிருக்கிறார்.
இதனால் பதறிய பெற்றோர் இது குறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வினோதினி, மாணவியை கர்ப்பமாக்கிய ராஜாவை போக்சோ வழக்கில் கைதுசெய்து, சிறையில் அடைத்தார்.

ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

இது தொடர்பான வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி, ``மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய ராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமாக ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
மேலும், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தார்.