Published:Updated:

15 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை!

இளைஞருக்கு 21ஆண்டுகள் சிறை
News
இளைஞருக்கு 21ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக இளைஞர் ஒருவருக்கு 21ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

15 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை!

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக இளைஞர் ஒருவருக்கு 21ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இளைஞருக்கு 21ஆண்டுகள் சிறை
News
இளைஞருக்கு 21ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (31). இவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, ஆம்னி வேனில் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பொன்னமராவதி போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். கடந்த 2019 ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்த வழக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அதில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மகிளா நீதிமன்றம்
மகிளா நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி முனைவர் சத்யா, 363 சட்டப்பிரிவின்படி, தாமரைச் செல்வனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதமும் விதித்தார். சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக தாமரைச் செல்வனுக்கு மொத்தமாக 21ஆண்டுகள் சிறைத் தண்டனையும்ம் ரூ.45,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத்தைக் கட்டத் தவறினால், மேலும் ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார். இதையடுத்து, தாமரைச் செல்வன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.