அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரைச் சேர்ந்தவர் பாரதி. இவர் கணவர் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரியாக வேலைப் பார்த்து வருகிறார். அதே தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இருவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாரதி வீட்டிற்கு வந்து போவதுமாக இருந்தபோது, பாரதிக்கும் ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி பாரதி தனியாக இருந்தபோது, அவர் வீட்டிற்கு சின்னராசு என்பவருடன் சென்ற ஜெயந்தி அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் சின்னராசு கொண்டு சென்ற கத்தியால் ஜெயந்தியுடன் சேர்ந்து பாரதியைக் கொடூரமாக குத்தி கொலை செய்தார். மேலும், வீட்டில் வைத்திருந்த 10 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் பணி முடித்து வீட்டிற்கு வந்த பாரதியின் கணவர் குணசேகரன், மனைவி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அப்போது, போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் ஜெயந்தி, சின்னராசு ஆகியோரைக் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை மாவட்ட நீதிபதி மகாலட்சுமி இன்று வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நகைக்காகக் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயந்தி, சின்னராசு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்க போலீஸார் அழைத்துச் சென்றனர்.