Published:Updated:

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு... குற்றவாளிகளுக்கு ஆயுள்!

கைது

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு... குற்றவாளிகளுக்கு ஆயுள்!

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Published:Updated:
கைது

தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்துவந்த 14 வயது சிறுமியை அதே பகுதியில் வசித்துவந்த 45 வயதுடைய நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரித்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் பெண் ஒருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. தி.நகர் அனைத்து மகளிர் போலீஸார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்து, சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தினர். வழக்கு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து 18-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் இரண்டு நபர்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கைச் சிறப்பாக புலனாய்வுசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த போலீஸ் டீமை உயரதிகாரிகள் பாராட்டினர்.