Published:Updated:

சேலம்: விவசாயி வெட்டிக் கொலை; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்!

கோர்ட்

விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கில் அவருடைய அண்ணன் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது.

சேலம்: விவசாயி வெட்டிக் கொலை; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்!

விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கில் அவருடைய அண்ணன் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது.

Published:Updated:
கோர்ட்

சேலம், மேச்சேரி அருகேயுள்ள கூனாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவந்தார். விவசாயி மணிக்கும், அவருடைய அண்ணன் அய்யந்துரைக்கும் இடையே நிலத்தகராறு இருந்துவந்தது.

இந்த நிலையில், 2014-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் அய்யந்துரை, அவருடைய மனைவி குப்பாயி, மகன் அப்புசாமி, மருமகள் செல்வி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து மணியிடம் தகராறு செய்தனர். மேலும், அய்யந்துரை தன் தம்பி மணியைக் கத்தியால் குத்தினார். அவர் மனைவி அப்புசாமி மணியை அரிவாளால் வெட்டினார். இதில், படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இது குறித்து மேச்சேரி போலீஸார் வழக்கு பதிவுசெய்து அய்யந்துரை குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் கைதுசெய்தனர். இந்த வழக்கு மேட்டூரிலுள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டுவந்தது.

கொலை
கொலை

இந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட அய்யந்துரை உடல்நலக் குறைவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட அப்புசாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10,000 அபராதமும், குப்பாயி, செல்வி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.10,500 அபராதமும் விதித்து நீதிபதி குமார சரவணன் தீர்ப்பு வழங்கினார்.