Published:Updated:

மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள்! - ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

ராமநாதபுரம் நீதிமன்றம்

13 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள்! - ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

13 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Published:Updated:
ராமநாதபுரம் நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து (34). இவர் மரம் ஏறும் தொழில் செய்துவந்திருக்கிறார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் மனைவி வீட்டு வேலை செய்துவருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவால் வேலையின்றி சவரிமுத்து வீட்டில் இருந்திருக்கிறார்.

அவர் மனைவி மட்டும் வீட்டு வேலைகளுக்குச் சென்று வந்திருக்கிறார். கஞ்சா போதைக்கு அடிமையான சவரிமுத்து, வீட்டில் தன்னுடைய பாதுகாப்பிலிருந்த 13 வயது மகளுக்கு கஞ்சா போதையில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும், `அம்மாவிடம் சொன்னால் அடித்துக் கொன்றுவிடுவேன்!' என மிரட்டி ஓராண்டாக மனைவி வேலைக்குச் சென்ற பிறகு மகளை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மகளிர் விரைவு நீதிமன்றம்
மகளிர் விரைவு நீதிமன்றம்

இந்த நிலையில், கடந்த ஆண்டு கஞ்சா போதை தலைக்கேறியபடி வீட்டுக்கு வந்த சவரிமுத்து, தன் மனைவியின் கண்முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, சவரிமுத்துவிடமிருந்து மகளை மீட்டு விசாரித்திருக்கிறார். அப்போது அவர் மகள், அடிக்கடி அப்பா தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவருவதைத் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து சாயல்குடி காவல் நிலையத்தில் மகளுடன் வந்த தாய், தன் கணவன் சவரிமுத்து மீது புகார் அளித்தார். அதன்பேரில் சவரிமுத்து போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், அதன் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை சவரிமுத்து இயற்கையாக மரணமடையும்வரை சிறைதண்டனை விதித்து நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism