Published:Updated:

குளிர்பானத்தில் மயக்க மருந்து; சிறுமி பாலியல் வன்கொடுமை! - குற்றவாளிக்குச் சாகும்வரை ஆயுள்

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆகியிருக்கிறது. இதற்கிடையேதான், ராஜ்குமார் சிறுமிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த16 வயது சிறுமியுடன், புதுக்கோட்டை அருகே மரவாமதுரை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (34) என்ற இளைஞர் நட்புடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். இந்த நிலையில், ஒரு நாள் சிறுமிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்து கொடுத்து அவருக்குத் தெரியாமலேயே அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதைக் காணொலியாக எடுத்து, அதைவைத்துத் தொடர்ந்து சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். நாளடைவில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோதுதான், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அப்போது ஆய்வாளராகப் பணிபுரிந்த ஹேமலதா வழக்கு பதிந்து குற்றவாளி ராஜ்குமாரைக் கைதுசெய்தனர். கடந்த 2019 முதல் இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணம் ஆகியிருக்கிறது. இதற்கிடையேதான், ராஜ்குமார் சிறுமிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. அதோடு, தொடர்ந்து மிரட்டி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கர்ப்பமாக இருப்பது தெரிந்து கருவைக் கலைக்கவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து; சிறுமி பாலியல் வன்கொடுமை! - குற்றவாளிக்குச் சாகும்வரை ஆயுள்

அதைக் கட்டத் தவறினால் ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதித்தார். அதோடு, இதர பிரிவு 328-ன்படி 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 அபராதமும், இதைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 506 பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத தண்டனை அனுபவிக்க வேண்டும். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1,50,000 நிவாரணமும் வழங்க வேண்டும் என்று கூறி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு