Published:Updated:

மந்திரித்த கயிறு, சொந்த நகைக்கடை... கொள்ளையர்கள் மாட்டிய பின்னணி! #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
News
#TamilnaduCrimeDiary

நெல்லையை அதிரவைத்த நகைக்கொள்ளை முதல், திருச்சியில் அடிக்கடி நடக்கும் மாணவர் தற்கொலைகள் வரை... #TamilnaduCrimeDiary

தங்கள் தொழிலில் சிறக்கவும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்கவும் வழிபாடு நடத்தி கையில் கயிறு கட்ட வந்திருக்கிறார்கள் பலே கொள்ளையர்கள் சிலர். வந்த இடத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த அவர்களைத் திருப்பூர் வரை விரட்டிச் சென்று நெல்லை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். ராமநாதபுரத்தில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவரின் வீடு வி.எம்.சத்திரத்தில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 88 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவுப்படி குற்றப்பிரிவு துணை ஆணையர் மகேஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.

கொள்லை போன வீடு
கொள்லை போன வீடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன்படி, இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படை மேற்கொண்ட புலனாய்வில் நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டிருப்பது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இக்கொள்ளையர்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களைக் காவல் அதிகாரிகளிடம் கேட்டுப் பெற்றோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திகைக்க வைத்த கொள்ளையர்கள்

நெல்லை மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதால் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் குறைந்திருந்தன. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தபோதும், டிசம்பர் 20-ம் தேதி வி.எம்.சத்திரம் பகுதியில் வீட்டை உடைத்து 88 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொள்ளையை நிகழ்த்தியவர்கள் கைரேகை எதையும் விட்டுச் செல்லவில்லை. தடயங்கள் எதுவும் கிடைக்காத போதிலும் சோர்வடையாத நெல்லை மாநகர குற்றப்பிரிவுப் போலீஸார், கொள்ளை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சித்திரிக்கப்பட்ட கார்
சித்திரிக்கப்பட்ட கார்

அப்போது மாருதி 800 கார் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் செல்வது தெரியவந்தது. அந்த காரின் நம்பர் போலியானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த கார் சென்ற வழிகளை ஆய்வு செய்தார்கள். தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திருப்பூர் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 350 கி.மீ பயணம் செய்த போலீஸார் வழியில் இருந்த ஹோட்டல்களில் கொள்ளையர்கள் உணவருந்தியது, கழிப்பிடத்துக்காக நின்றது போன்ற சிசிடிவி காட்சிகளைச் சேகரித்தனர். அதில் கிடைத்த புகைப்படங்கள் மூலம் திருப்பூர் போலீஸாரின் உதவியுடன் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் மகேஷ்குமாரிடம் பேசியபோது, "நெல்லையில் நடந்த மிகப்பெரிய குற்றச் சம்பவம் என்பதால் தனிப்படை அமைத்தோம். கொள்ளையர்கள் எந்தவிதமான ஆதாரங்களையும் விட்டுச் செல்லாத போதிலும் திறமையாகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட ராமஜெயம், குருவி என்ற குருசக்தி, முகமது ரபீக், யாசர் அராபத் ஈடுபட்டதைக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து ஆகியவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து 77 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.

துணை ஆணையர் மகேஷ்குமார்
துணை ஆணையர் மகேஷ்குமார்

இந்தக் கொள்ளையர்கள் நான்கு பேரும் தாங்கள் கொள்ளையடிக்கும் நகையை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் சொந்தமாக நகைக்கடையைத் திருப்பத்தூரில் உள்ள பள்ளத்தூரில் அமைக்க முடிவு செய்திருந்தார்கள். நகைக்கடை அமைப்பதற்காக ஒரு கடையை வாடகைக்கு எடுத்ததுடன், ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் கடையை அலங்கரித்து வைத்திருந்தனர். அடுத்த ஒரு வாரத்தில் நகைக்கடை தொடங்க இருந்த நிலையில், நெல்லையில் கொள்ளையடித்ததால் மாட்டிக்கொண்டனர்" என்றார்.

மந்திரித்த கயிறுக்காக அலைந்த கொள்ளையர்கள்!

சரி, இவ்வளவு லாவகமாகக் கொள்ளையடித்தவர்கள் தனிப்படையிடம் எப்படிச் சிக்கினார்கள்..? தனிப்படையினரிடம் பேசியபோது, "திருப்பூரில் பிளாஸ்டிக் தொழில் செய்து வந்த ராமஜெயம் என்பவருக்குத் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவரது சொந்த வீடு உள்ளிட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்க முற்பட்ட நேரத்தில்தான், குருவி என்கிற குருசக்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குருசக்தி ஏற்கெனவே 25 வழக்குகளில் தொடர்புடையவர். அவருடன் சிறையில் இருந்தபோது ராமஜெயத்துக்கு தொடர்பு கிடைத்துள்ளது. அத்துடன் யாசர் அராபத், முகமது ரபீக் ஆகியோரிடமும் ராமஜெயத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் சிறையில் இருந்தபோதே வீடுகளை உடைத்துக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மந்திரித்த கயிறு
மந்திரித்த கயிறு

திருப்பூர் பகுதியில் கொள்ளையடித்து வந்த இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், கொள்ளையடிக்கும் நகைகளை விற்பனை செய்வதற்காக நகைக்கடை தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பாக ஏர்வாடியில் உள்ள தர்காவில் மந்திரித்து கயிறு கட்டினால் தொழில் சிறக்கும் என்றும் போலீஸ் பிடியில் சிக்காமல் கொள்ளையடிக்கலாம் என்றும் நினைத்திருக்கிறார்கள்.

அதனால் ரூ.60,000 செலவில் பழைய கார் வாங்கிய நால்வரும், குற்றாலத்தில் வந்து தங்கியுள்ளனர். அங்கிருந்து ராதாபுரம் ஏர்வாடிக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு மந்திரிப்பது கயிறு கட்டுவது போன்றவை செய்யப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடிக்குச் சென்றிருக்கிறார்கள்.

விளையாடிய விதி

ஏர்வாடி செல்லும் நான்கு வழிச்சாலையில் பயணித்தபோது அவர்கள் விதி விளையாடிவிட்டது. சாலையின் ஒதுக்குப்புறத்திலுள்ள வி.எம்.சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்துவிட்டுச் செல்ல முடிவு செய்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் வங்கி அதிகாரி வீட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

குற்றாலத்தில் இருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்த துண்டு மூலம் கைரேகைகளை அழித்துள்ளனர். எந்தத் தடயமும் போலீஸிடம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தபோதிலும், அவர்கள் வந்திருந்த கார் காட்டிக் கொடுத்துவிட்டது. அவர்கள் சென்ற வழியைப் பின்தொடர்ந்து சென்று குற்றவாளிகளைக் கைது செய்தோம்" என்றனர். திறமையாகச் செயல்பட்ட தனிப்படையினரை நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் பாராட்டினார். கொள்ளையர்களைத் திறமையாகப் பிடித்த நெல்லை காவல்துறைக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

யார் செய்த தவறு?
அடுத்தடுத்த மாணவர் தற்கொலை... பதறும் திருச்சி

திருச்சி மாவட்டம், முசிறி காந்தி நகரைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரின் மூத்த மகன் பிரவீன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தை துரைராஜ் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில், பிரவீன் அவரின் தாய் வாசுகி கவனிப்பில் இருந்தார்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மாணவர் பிரவீன் அவரது வீட்டில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இறப்புக்கான காரணங்களை போலீஸார் விசாரித்துவரும் நிலையில் பள்ளி நிர்வாகம்தான் அவரது மரணத்துக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள் அவரின் பெற்றோர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு சக மாணவி ஒருவரும், மாணவர் பிரவீனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரிய வரவே, மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்து கண்டித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவியுடன் பிரவீன் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், அவரின் ஆசிரியர்கள் மாணவிகள் முன்பு நிறுத்தி வைத்தனர். அதைப் பார்த்த மாணவி ஒருவர், பிரவீனைக் கேலி செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் அந்த மாணவியைக் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகப் பள்ளி நிர்வாகம், பிரவீனை 10 நாள்கள் சஸ்பெண்டு செய்துள்ளது.

பிரவீன்
பிரவீன்

10 நாள்கள் கழித்து பிரவீன் மீண்டும் பள்ளிக்கு வந்தபோது, பள்ளி நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பிரவீன், தாய் வாசுகியை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்களைக் காக்க வைத்த பள்ளிநிர்வாகம், பிரவீனை பள்ளியைவிட்டு நீக்கியதாகக் கூறியுள்ளது. இதனால் மன உளைச்சலுடன் வீட்டுக்கு வந்த பிரவீன், வீட்டில் ஆளில்லாத நேரத்தில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கையே தன் மகனின் மரணத்துக்குக் காரணம் என்றும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காவல்துறை எஸ்.பி மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பிரவீனின் தாய் வாசுகி புகார் அளித்துள்ளார். பள்ளி நிர்வாகமோ, "மாணவர் பிரவீனிடம் எவ்வித கெடுபிடியும் காட்டவில்லை. அவர் மாணவியைத் தாக்கியதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்குப் பதிலாக எங்கள் நிர்வாகத்தில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றினோம்” என விளக்கமளித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, துறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவர் வேறொரு பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டார். திருச்சியில் அடுத்தடுத்து நிகழும் தனியார் பள்ளி மாணவர்களின் தற்கொலைகளால் மாவட்டமே அதிர்ந்துள்ளது.