Published:Updated:

விவசாயத்தால் குறையும் குற்றச் சம்பவங்கள்... சிவகங்கை போலீஸ் நிம்மதி! #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

பருவ மழையால் குற்றச் செயல்கள் குறைந்து, சிவகங்கையில் நிம்மதிக் காற்று வீசுகிறது.

பழிக்குப் பழி கொலைகள், சொத்துத் தகராறு, கொள்ளை என கடந்தாண்டின் பெரும்பகுதி ரத்த வெள்ளமாகவே சிவகங்கையில் ஓடியது. ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் 4 கொலைச் சம்பவங்கள் நடந்தேறி தமிழகத்தையே அதிரவைத்தன. சிவகங்கை நகர், மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் என்று கணிக்க முடியாத அளவுக்கு மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் நடந்தன. இப்படி ஒரு சென்சிட்டிவ் மாவட்டமாக இருந்த சிவகங்கை தற்போதுதான் சற்று அமைதியாக இருக்கிறது.

சிவகங்கை
சிவகங்கை

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபருக்குப் பிறகு கொலைகள், உட்பட்ட முக்கியமான குற்றச் சம்பவங்கள் நடைபெறவில்லை. அதற்கு முன்புவரை எங்களுக்கு ஓய்வே இல்லை. அடிக்கடி பெரிய குற்றச் சம்பவங்கள் நடந்ததால் மக்கள் பீதியடைந்தனர். வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுதும் விவசாயப் பணிகள் நடைபெறுவதால் குற்றச் சம்பவங்களும் குறைந்துள்ளன.

`வீட்டில் 65 பவுன், கடையில் 3 கிலோ தங்கம்!' -நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையன்

பொதுமக்கள் விவசாயப் பணிகளிலும் இதர வேலைகளிலும் கவனத்தைச் செலுத்துவதால் காவல்துறையினர் நிம்மதியடைந்துள்ளோம். மாவட்டத்தில் வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால்தான் அதிக கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது உண்மை. எனவே, அமைச்சர் ஜி.பாஸ்கரனும் எம்.பி கார்த்தி சிதம்பரமும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்'' என்றார்.

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்

மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் பேசினோம். ``மாவட்டத்தில் தற்போது குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனால், பொதுமக்களுக்கு குறைகள் என்பது எப்போதும் போலத்தான் இருக்கின்றன. அதனால் திங்கள் மட்டுமல்ல; தினமும் மனுக்கள் பெற்று தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறேன். சிவகங்கை மாவட்டத்தில் எல்லாக் கண்மாய்களும் நிறைந்துள்ளதால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்கின்றனர். மானாவாரி பூமியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, விவசாயம் நடைபெறுகிறது. டன் கணக்கில் நெற்பயிர் விளைந்துள்ளது. ஈரோடு, கோவையோடு போட்டிபோடும் அளவுக்குச் சிவகங்கை விவசாயத்தில் முன்னேறியுள்ளது. விவசாயிகளுக்கு மானாவாரிக்கு ஏற்றதுபோல் பயிர்களைத் தேர்வு செய்து வழங்குகிறோம்” என்றார்.

சிவகங்கையில் விவசாயத்தால் குற்றங்கள் குறைந்துள்ளது என்ற தகவல் மகிழ்ச்சிதான். ஆனாலும், தொழில் வாய்ப்புகளை அரசு அதிகப்படுத்தாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு