Published:Updated:

சென்னை, மதுரை, தூத்துக்குடி... 2021 குற்ற வழக்குகள் டேட்டா சொல்வது என்ன?

குற்ற வழக்குகள்
News
குற்ற வழக்குகள்

கடந்த 2021-ம் வருடம் சென்னை, மதுரை, தூத்துக்குடியில் நடைபெற்ற குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள் அந்தந்த மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் விவரங்கள்...

கொலை மற்றும் கொள்ளை :

2021-ம் ஆண்டில் சென்னையில் மட்டும் 138 கொலைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் 10 ரௌடிகள் அடங்குவர். ஆதாயக் கொலைகள் 10 நடந்திருக்கின்றன. 138 கொலை வழக்குகளில், 137 வழக்குகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதே ஆண்டில் 353 கொள்ளைச் சம்பவங்களும், 24 கூட்டுக் கொள்ளைச் சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. கொள்ளை வழக்குகளில் 300 குற்றவாளிகளும், கூட்டுக் கொள்ளை வழக்குகளில் 23 குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை
கொலை

திருட்டு வழக்கு :

2021-ம் ஆண்டில் சென்னையில் மட்டும் 693 செல்போன் பறிப்புச் சம்பவங்களும், 194 சங்கிலி பறிப்புச் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. சங்கிலி பறிப்பு தொடர்பாகப் பதியப்பட்ட 139 வழக்குகளிலும், 488 செல்போன் பறிப்பு வழக்குகளிலும் மட்டுமே குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெரிய அளவில் நடைபெற்ற 42 திருட்டு வழக்குகளில் 24 வழக்குகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னையில் கடந்த ஆண்டில் மொத்தமாக 1,316 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 983 வழக்குகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 397 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 3,887 வாரன்ட்டுகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் 1,682 வாரன்ட்டுகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படாமல் இருக்கிறார்கள்.

நகை வழிப்பறி
நகை வழிப்பறி
மாதிரி படம்

சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 462 பேரும், போக்சோ சட்டத்தில் 408 பேரும் கைதாகி சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். எட்டு வழக்குகள் சென்னை மாநகர காவல்துறையிடமிருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளன. 930 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. 952 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல, மதுரையில், 2021-ம் ஆண்டு 63 கொலை வழக்குகளில் 162 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 34 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொள்ளை, கூட்டுக் கொள்ளை, வழிப்பறி என மொத்தம் 709 வழக்குகளில் 444 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 938 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போக்சோ சட்டத்தில் 113 வழக்குகளில் 148 பேரும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 419 வழக்குகளும், அது தொடர்பாக 585 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் திருட்டு தொடர்பாக 188 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில், 403 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொலை
கொலை

2021-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைப் பொறுத்தவரை, 47 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக மொத்தம் 147 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொள்ளை, கூட்டுக் கொள்ளை, வழிப்பறி என்று மொத்தம் 532 வழக்குகளில் 353 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 613 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 3.23 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 200 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 21 கிலோ ஹெராயின் உள்ளிட்ட 356 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8,676 கிலோ புகையிலைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மணல் திருட்டு தொடர்பாக 184 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில், 183 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.