Published:Updated:

க்ரைம் டேப்ஸ் : வீடியோ கால்; மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள்! - காயத்ரிக்கு நடந்தது என்ன? | பகுதி 6

க்ரைம் டேப்ஸ்

காயத்ரி மீது அவளுடன் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் ஒரு கண் இருந்தது. ஒருசிலர் காயத்ரிக்குத் தூது அனுப்பியும் பார்த்தனர்.

க்ரைம் டேப்ஸ் : வீடியோ கால்; மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள்! - காயத்ரிக்கு நடந்தது என்ன? | பகுதி 6

காயத்ரி மீது அவளுடன் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் ஒரு கண் இருந்தது. ஒருசிலர் காயத்ரிக்குத் தூது அனுப்பியும் பார்த்தனர்.

Published:Updated:
க்ரைம் டேப்ஸ்

க்ரைம் டேப்ஸ் தொடரை தொடர்ந்து வாசித்துவரும் இன்ஜினீயர் பட்டதாரி ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவத்தைக் கூறி, அதில் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து எழுதுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதன் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன.

காதல் அத்தியாயம்

அந்தச் சம்பவம்: காயத்ரி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். பார்த்தவர்களைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு. படிப்பிலும் கெட்டிக்காரி. காயத்ரியுடன் படித்துக்கொண்டிருந்த அர்ஜூன், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். அர்ஜூனின் அப்பா அரசாங்கத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். செல்வாக்கான குடும்பம். விலையுயர்ந்த சொகுசு காரில்தான் அர்ஜூன் கல்லூரிக்கு வந்து போவான். காயத்ரிமீது அவளுடன் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் ஒரு கண் இருந்தது. ஒருசிலர் காயத்ரிக்குத் தூது அனுப்பியும் பார்த்தனர். ஆனால் காயத்ரி யாருக்கும் மசியவில்லை. அர்ஜூனுக்கும் காயத்ரி மீது ஓர் ஈர்ப்பு இருந்தது. காயத்ரியுடன் ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய அர்ஜூன் ஒரு சுபயோக தினத்தில் தன் காதலை அவளிடம் சொல்லியிருக்கிறான். ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்த காயத்ரி, அர்ஜூனின் தொடர் முயற்சியால் அவன் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டாள். பிறகு என்ன? இருவரும் ஒன்றாக ஊர்சுற்றத் தொடங்கியிருக்கிறார்கள். அர்ஜூனிடம் கார் இருந்தது. பல இடங்களுக்கு அர்ஜூனுடன் சென்று வந்தாலும் கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட காயத்ரி எல்லை மீறவில்லை. அர்ஜூனும் காயத்ரியைக் கட்டாயப்படுத்தவில்லை. அதுவே காயத்ரிக்கு அவன் மீதான காதலை அதிகப்படுத்தியிருந்தது. இருவரும் சந்தித்துக்கொண்டபோதெல்லாம் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். நெருக்கமாக இருந்த தருணங்களில் வீடியோவும் எடுத்திருக்கிறார்கள்.

பாலியல்
பாலியல்
https://pixabay.com/

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காமுகன்

கல்லூரி இல்லாத நாள்களில் இருவரும் வீடியோ காலில் பேசிக்கொண்டார்கள். சில மாதங்கள் இப்படியே போய்க்கொண்டிருக்க, ஒரு நாள் அர்ஜூன் காயத்ரியை காரில் சற்று தொலைவிலுள்ள ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஒரு ரிசார்ட்டில் இருவரும் தங்கியிருக்கிறார்கள். அங்கே அர்ஜூனின் இன்னொரு முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறாள் காயத்ரி. அர்ஜூன், காய்த்ரியிடம் தவறாக நடக்க முயல, காயத்ரி அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு, அது கடும் வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது. ஒருகட்டத்தில் காயத்ரி கோபித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள். பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்த காயத்ரி, தன் அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அழுதிருக்கிறாள். மனதிலுள்ள பாரம் நீங்கும் வரை அழுது தீர்த்த காயத்ரி, அர்ஜூனைவிட்டுப் பிரிந்துவிடுவது என முடிவு செய்திருக்கிறாள். அர்ஜூனுக்கு பிரேக்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு இனி புதிதாகப் பிறந்தோம் என்ற மனநிலையில் அடுத்த வேலையைப் பார்க்கக் தொடங்கிவிட்டாள். ஆனால் அடுத்தடுத்து அதிர்ச்சிச் சம்பவங்கள் அரங்கேறப்போவதை அப்போது அப்போது காயத்ரி அறிந்திருக்கவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள்

'பிரேக்அப்' என்ற மெசேஜைப் பார்த்த அர்ஜூன் அடுத்த சில விநாடிகளில் காயத்ரியுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை அனுப்பியிருக்கிறான். காயத்ரியுடனான வீடியோ கால் மற்றும் ஆடியோக்களையும் அனுப்பிவைத்திருக்கிறான். காதல் முறிவால் ஏற்பட்ட விரக்தியில் செய்வதாக காயத்ரி நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில் அர்ஜூனிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில் `இந்த போட்டோ, வீடியோ, ஆடியோவை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைப்பேன், இன்டர்நெட்டில் போடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறான். அத்துடன், காயத்ரியின் போட்டோவை ஆப்களின் மூலம் நிர்வாணப் படமாக மாற்றியிருக்கிறான். (இதற்கென பிரத்யேக ஆப்கள் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?) அந்த `நிர்வாணப் படங்களையும் வெளியிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறான். இவற்றையெல்லாம் செய்யாமலிருக்க தன்னுடைய இச்சைக்கு காயத்ரி இணங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறான்.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்
https://pixabay.com/

காயத்ரி நொறுங்கிப்போனாள். இப்படிப்பட்ட ஒருவனையா காதலித்தோம் என்று தாங்க முடியாத வேதனையில் கதறி அழுதிருக்கிறாள். அர்ஜூன் அவளைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டேயிருக்க, ஒருகட்டத்தில் காயத்ரி தற்கொலை செய்துகொள்ளலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறாள். காயத்ரியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவளிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், காய்த்ரி ஒன்றும் இல்லை என்று சமாளித்துவிட்டாள். கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களும் காயத்ரி எதையோ இழந்தது போலிருப்பதைப் பார்த்து கவலையுடன் விசாரித்திருக்கிறார்கள். காயத்ரி அவர்களிடமும் ஏதேதோ சொல்லிச் சமாளித்துவிட்டாள். இன்னொரு பக்கம், அர்ஜூன் காலக்கெடு விதித்து அதற்குள் தன் விருப்பத்துக்கு சம்மதிக்கவில்லையென்றால் அந்த போடடோக்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறான்.

காயத்ரி வகுப்பில் படித்த அஹமத் என்ற இன்னொரு மாணவன் படிப்பில் படு சுட்டி. தகவல் தொழில்நுட்பங்களை கையாள்வதில் கைதேர்ந்தவன். யார் வம்புக்கும் போகாதவன். நல்லவன். காயத்ரி தயங்கித் தயங்கி அவனிடம் அர்ஜூனின் டார்ச்சர் குறித்துக் கூறி அழுதிருக்கிறாள். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த அஹமத், எப்படியாவது காயத்ரிக்கு உதவ வேண்டும் என முடிவு செய்தான். அதற்காக, காயத்ரிக்கு சில யோசனைகளை அஹமத் வழங்கியிருக்கிறான்.

பாலியல்
பாலியல்
https://pixabay.com/

அதன்படி காயத்ரி அர்ஜூனிடம் பேசி அவனுடைய ஆசைக்கு இணங்குவதாகக் கூறியிருக்கிறாள். காயத்ரி திடீரென இறங்கி வந்ததில் அர்ஜூனுக்கு சந்தோஷத்தில் இருப்பு கொள்ளவில்லை. உடனடியாக ரிசார்ட்டில் அறையை புக் செய்துவிட்டான். ஓர் இரவு மட்டும் தன்னுடன் தங்கினால் காயத்ரியின் போட்டோக்கள், வீடியோக்களை அவள் கண்முன்னாலேயே அழித்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறான். அந்த நாளும் வந்தது... காயத்ரிக்காக அர்ஜூன் புக் செய்திருந்த அறைக்குப் பக்கத்திலேயே அஹமத்தும் அறை எடுத்துக்கொண்டான். திட்டமிட்டபடி அர்ஜூன் அறைக்குச் சென்ற காயத்ரி, அவன் இச்சைக்கு இணங்குவதுபோல பேச்சுக் கொடுத்து அவனை நம்பவைத்திருக்கிறாள். அர்ஜூன் அசந்த நேரத்தில் அவன் செல்போனில் ப்ளூடூத்தை ஆன் செய்திருக்கிறாள். பக்கத்து அறையில் இருந்த அஹமத் தன்னிடம் இருந்த ஆப் ஒன்றை அர்ஜூன் செல்போனுக்கு அனுப்ப, காயத்ரி அர்ஜூனுக்குத் தெரியாமல் அவன் செல்போனில் அதை தரவிறக்கம் செய்திருக்கிறாள்.

அழிக்கப்பட்ட புகைப்படங்கள்

காயத்ரியின் அழகிலும் பேச்சிலும் சொக்கிப்போயிருந்த அர்ஜூனுக்கு இது எதுவும் தெரியவில்லை. ப்ளூடூத் வழியாக குறிப்பிட்ட ஒரு ஆப்பின் துணையோடு அர்ஜூனின் செல்போனுக்குள் ஊடுருவிய அஹமத் அவன் செல்போன் கேலரியில் இருந்த போட்டோ வீடியோக்களை சுவடே இல்லாமல் அழித்துக்கொண்டிருந்தான். அதுவரை அர்ஜூனிடம் இணக்கமாக இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருந்த காயத்ரி அந்த போட்டோ வீடியோக்கள் அழிந்ததை அறிந்ததும், அவனைத் தள்ளிவிட்டபடி, அந்த அறைக்குள்ளிருந்து விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.

காயத்ரியின் நடவடிக்கையைப் பார்த்து ஏமாற்றமடைந்த அர்ஜூன், அவன் செல்போனிலிருந்த காயத்ரியின் போட்டோக்களும் வீடியோக்களும் அழிந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனான். காயத்ரியைத் தன் வலையில் வீழ்த்தலாம் என்று நினைத்து வந்தவன், காயத்ரி விரித்த வலையில் விழுந்துவிட்டதை உணர்ந்து நொந்துபோனான். திருடனுக்குத் தேள் கொட்டிய மொமன்ட் அது.

பாலியல்
பாலியல்
https://pixabay.com/

அப்போதே அர்ஜூனிடம் சென்ற அஹமத், அவனை எச்சரித்துவிட்டு வந்திருக்கிறான். அதன் பிறகு காயத்ரி நிம்மதியாக இருக்கிறாள். இந்த உண்மைச் சம்பவத்தை என்னிடம் பகிர்ந்துகொண்ட அஹமத், `காயத்ரிக்கு என்னால் கிடைத்த இந்த உதவி எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, பெண்கள் உஷாராக இருக்கவும், மிரட்டப்பட்டால் தைரியமாக அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்’ என்று சொல்லி புன்னகை செய்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism