Published:Updated:

க்ரைம் டேப்ஸ்: காவல்துறையின் பொய் வழக்கால் தவித்த பிரபல கல்லூரி முதல்வர்; என்ன நடந்தது? | பகுதி 8

க்ரைம் டேப்ஸ்

கஞ்சா வைத்திருந்ததாகப் பொய் வழக்கு போட்டு, அவரைச் சிறையில் அடைத்துவிட்டது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் நான்கைந்து நாள்களாக வீடு திரும்பவில்லை என்று அவருடைய மனைவி தவித்திருக்கிறார்.

க்ரைம் டேப்ஸ்: காவல்துறையின் பொய் வழக்கால் தவித்த பிரபல கல்லூரி முதல்வர்; என்ன நடந்தது? | பகுதி 8

கஞ்சா வைத்திருந்ததாகப் பொய் வழக்கு போட்டு, அவரைச் சிறையில் அடைத்துவிட்டது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் நான்கைந்து நாள்களாக வீடு திரும்பவில்லை என்று அவருடைய மனைவி தவித்திருக்கிறார்.

Published:Updated:
க்ரைம் டேப்ஸ்
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்

`காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற வாசகம், தினமும் ஒரு முறையாவது நம் கண்ணில் பட்டுவிடும். `காவல்துறையினர் உண்மையில் மக்களிடம் நட்புணர்வுடன் பழகுகிறார்களா?’ என்ற கேள்விக்குப் பலரும் `இல்லை’ என்ற ஒரே பதிலைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது.

மதுரையில் தொழிலதிபரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் ஆய்வாளர் வசந்தி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. அதேபோல கோவை தொழில் அதிபர் ஒருவர்மீது வழக்கு போடாமல் இருக்க 28 லட்சம் ரூபாய் பேரம் பேசிய சென்னை ஆயிரம் விளக்கு ஆய்வாளர் ஞானப்பிரகாசம் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

க்ரைம் டேப்ஸ்
க்ரைம் டேப்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருசில தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம் ஆய்வாளர் அமுதா இதே போன்றதொரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். காவல்துறையினரைப் பகைத்துக்கொண்டால் அவர்கள் நம்மை நிம்மதியாக வாழவிட மாட்டார்கள்; பொய் வழக்குப் போட்டு அலைக்கழிப்பார்கள் என்ற அச்சம் பொதுமக்களிடம் பரவலாக இருக்கிறது. இதனாலயே போலீஸாரின் அத்துமீறல்களையும் அராஜகங்களையும் எதிர்க்கவும், வெளியே சொல்லவும் எல்லோரும் பயப்படுகிறார்கள்.

இதனால் லட்சணக்கணக்கில் பணத்தை இழந்தவர்களும், மன நிம்மதியைப் பறி கொடுத்தவர்களும் ஏராளம். இதைத்தான் மேலே சொன்ன சம்பவங்கள் உணர்த்துகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் செய்தியாளராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். பிரபல கல்லூரி முதல்வர் ஒருவர் கஞ்சா வைத்திருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. கல்லூரி மாணவர்களில் சிலர் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கல்லூரி முதல்வரே கஞ்சா வைத்திருந்தார் என்றால், அது எவ்வளவு பெரிய சமூகவிரோதச் செயல்! இதைப் பற்றி தீர விசாரித்து எழுதியே ஆக வேண்டும் என்று நான் களத்தில் இறங்கினேன்.

அப்போதுதான், அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என் கவனத்துக்கு வரத் தொடங்கின. அந்தக் கல்லூரி உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு மூன்று மகன்கள். அவர்களுக்குள் கல்லூரியை யார் நிர்வகிப்பது என்பதில் தகராறு இருந்துவந்தது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் கோர்ட் வரை போக, அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி கல்லூரி நிர்வாகத்தைத் தற்கலிகமாக நீதிமன்றம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஆதங்கத்தில் அண்ணன், தம்பிகள் தங்களுக்குள் தொடர்ந்து மோதிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது சம்பந்தமாக சகோதரர்களில் ஒருவரிடம் போலீஸார் விசாரித்திருக்கிறார்கள். இன்னொருவர் விசாரணைக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார்.

ஆகவே, அவரது தூண்டுதலின்பேரில்தான் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும் என்று போலீஸார் அவரைத் தேடத் தொடங்கினர். அப்போது அந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்த இன்ஜினீயர் பட்டதாரிக்குத் தலைமறைவாக இருக்கும் நபரைப் பற்றித் தெரிந்திருக்கும் என போலீஸார் சந்தேகித்திருக்கிறார்கள். கல்லூரி முதல்வர் தனக்கு எதுவும் தெரியாது என்று எவ்வளவோ சொல்லியும் நம்ப மறுத்த போலீஸார் அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகுந்த கொடுமைகளுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இறுதியில் அவருக்கு எதுவுமே தெரியாது என்பதை உணர்ந்துகொண்ட போலீஸார் அவரை விடுவிக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் போலீஸாரின் டார்ச்சரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவரை வெளியேவிட்டால், பிரச்னை வரும் என்று நினைத்த காவல்துறை அடுத்து செய்தததுதான் கொடூரத்தின் உச்சம்!

கஞ்சா வைத்திருந்ததாகப் பொய் வழக்கு போட்டு அவரை சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் நான்கைந்து நாள்களாக வீடு திரும்பவில்லை என்று அவருடைய மனைவி தவித்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் மனைவிக்கு சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்திருந்தது. கைக்குழந்தையுடன் தவித்த அந்தப் பெண் தன் கணவரைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி காவல்துறையிடமே புகார் கொடுத்தது இன்னொரு பரிதாபம்.

இந்தநிலையில், விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கல்லூரி முதல்வரைப் பார்த்த நீதிபதி, `ஒரு முதல்வர் மீது கஞ்சா வழக்கா?’ என்று ஆச்சர்யப்பட்டு அவரிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் அது பொய் வழக்கு என்பது நீதிபதிக்குத் தெரியவந்திருக்கிறது.

க்ரைம் டேப்ஸ்
க்ரைம் டேப்ஸ்

உடனடியாக அந்த நீதிபதி அவரை விடுவித்ததுடன், விசாரணைக்கும் உத்தரவிட்டார். விசாரணையில் கல்லூரி முதல்வர் மீது போடப்பட்ட கஞ்சா வழக்கு போலியானது என்பது தெரியவர சம்பந்தபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தார். கல்லூரி முதல்வருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.

எதற்காக இந்தச் சம்பவத்தை சொல்கிறேனென்றால், காவல்துறையினரால் பாதிக்கப்படும் மக்கள் அவர்கள்மீது புகார் கொடுக்கவோ, எதிர்த்து கேள்வி கேட்கவோ தயங்கி நிற்கும் நிலை இருக்கிறது. காவல்துறையிலுள்ள அனைவருமே கெட்டவர்கள் அல்லர். அதேபோல யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டனை கிடைப்பது உறுதி. போலீஸாருக்கு யாரும் பயப்படவேண்டியதில்லை. அவர்கள் அத்துமீறினால் அது பற்றி உரிய இடத்தில் முறையீடு செய்ய பல வழிகள் உள்ளன என்பதை மறக்க வேண்டாம்!

(சுழலும்...)