Published:Updated:

`மதுவிருந்து; காவலருக்கு விழுந்த வெட்டு; அரிவாள் ஆட்டம்!' -நெல்லைக்குத் தொல்லை கொடுத்த குடிமகன்கள்

டாஸ்மாக் கடை
News
டாஸ்மாக் கடை

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தபோது மக்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்ததுடன் குற்றச்சம்பவங்களும் குறைந்திருந்தன.

Published:Updated:

`மதுவிருந்து; காவலருக்கு விழுந்த வெட்டு; அரிவாள் ஆட்டம்!' -நெல்லைக்குத் தொல்லை கொடுத்த குடிமகன்கள்

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தபோது மக்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்ததுடன் குற்றச்சம்பவங்களும் குறைந்திருந்தன.

டாஸ்மாக் கடை
News
டாஸ்மாக் கடை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக பொதுமக்களுக்கான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் தொடக்கத்தில், குடிமகன்கள் சற்று சிரமத்தைச் சந்தித்தனர். சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்ச முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து குடிமகன்கள், மது இல்லாத நிலைக்குப் பழகிவிட்டனர்.

இந்தநிலையில், மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது பொதுமக்களுக்காக மத்திய அரசு விதிமுறைகளைத் தளர்த்தியது. அதைப் பயன்படுத்தி, தமிழக அரசு நேற்று (7-ம் தேதி) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்துள்ளது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கடைகள் திறக்கப்பட்டதால் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மதுபானம் இல்லாமல் பழகிய பொதுமக்கள், மீண்டும் மதுக்கடைகளை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள். கொரோனா பரவல் அச்சம் காரணமாக வீட்டில் இருந்தவர்கள், டாஸ்மாக் கடைகளில் கூடத் தொடங்கினார்கள். மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குற்றச்செயல்களும் சாலை விபத்துகளும் அதிகரித்துவிட்டதாக போலீஸார் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று கொலைச் சம்பவங்களும் பல்வேறு அடிதடி, வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் கோயில் வரிவசூல் தொடர்பாக முப்பில்லிபாண்டி, ராஜேந்திரன் ஆகியோருக்கிடையே தகராறு இருந்துள்ளது. மதுக்கடை திறக்கப்பட்டதும் குடித்துவிட்டு வந்த முப்பிலிபாண்டியின் தம்பி மருதுபாண்டி, அவரது நண்பர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ராஜேந்திரனை வெட்டிக் கொன்றனர்.

நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா, சுரேஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக இசக்கிமுத்து என்பவரை அடித்து அவர் தலையில் கல்லைப் போட்டு கொன்றனர். குடிபோதையின் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் மது விருந்து நடந்துள்ளது. அப்போது மது குடித்து விட்டு போதையில் இருந்தவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. இதில் இரு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி கிராமத்தில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் நடந்து வந்த இளைஞர் ஒருவர், எதிரில் வந்தவர்களை அரிவாளால் வெட்டியுள்ளார். பலரும் தலைதெறிக்கத் தப்பியோடிய நிலையில் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த அப்பாவி ஒருவருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் மது போதையில் இருந்த இளைஞர்களுக்கிடையே மோதல் வெடித்ததில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சிலருக்குக் காயம் ஏற்பட்டது.

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

கடையம் அருகே உள்ள புலவனூர் கிராமத்தில் மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பலரிடம் தகராறு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சங்கரன்கோவில் அருகே சோதனைச் சாவடியில் இருந்த காவலரை குடிபோதையில் வந்த மோகன்ராஜ் என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்தனர். 

டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வன்முறையால், கிராமப் பகுதிகளில் கூடுதல் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.