Published:Updated:

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கேங்ஸ்டர் சுட்டுக் கொலை! - வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் வெறிச்செயல்

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் கேங்ஸ்டர் ஒருவரை சுட்டுக் கொலைசெய்தனர். இதில் துப்பாக்கியால் சுட்டவர்களை போலீஸார் எதிர்த்தாக்குதலில் சுட்டுக் கொன்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த ஜிதேந்தர் கோகி என்ற கேங்ஸ்டர், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டுவந்தார். கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஜிதேந்தர் மீது 19 வழக்குகள் இருக்கின்றன. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜிதேந்தர் சிறையில் இருந்துகொண்டே தனது குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸார் வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக டெல்லி ரோஹினி நீதிமன்றத்துக்கு ஜிதேந்தரை அழைத்துவந்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் திடீரென வழக்கறிஞர் உடையில் வந்த ஜிதேந்தரின் எதிரிகள் இரண்டு பேர் ஜிதேந்தர் மீது சரமாரியாகச் சுட்டனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஜிதேந்தரின் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் அவர்களைத் திருப்பிச் சுட்டனர்.

ஜிதேந்தர்
ஜிதேந்தர்

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜிதேந்தர் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். டெல்லி டி.ஜி.பி பிரனவ் இது குறித்துக் கூறுகையில், ``வழக்கறிஞர் உடையில் வந்த இரண்டு பேர் ஜிதேந்தர் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீஸார் உடனே திருப்பிச் சுட்டனர்’’ என்றார்.

டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா இது குறித்துக் கூறுகையில், ``தில்லு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். தில்லு கூட்டத்தினரை ஏற்கெனவே போலீஸார் ஒடுக்கிவிட்டனர். ஆனால் இப்போது அவர்கள் இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கிரிமினல் வார் கிடையாது’’ என்று தெரிவித்தார்.

6 ஏ.டி.எம் இயந்திரங்களை அடித்து நொறுக்கிய நபர்; கைது செய்த போலீஸ்; நடந்தது என்ன?

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து வழக்கறிஞர்களும் பொதுமக்களும் நீதிமன்றத்திலிருந்து அலறியடித்துத் தப்பி ஓடினர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜிதேந்தரைச் சுட்ட இரண்டு பேரும் உயிரிழந்தனர். ஜிதேந்தர் கூட்டத்துக்கும் தில்லு கூட்டத்துக்கும் பல ஆண்டுகளாகப் பகை இருந்துவருகிறது. இதில் 25 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜிதேந்தரின் தந்தை கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜிதேந்தர் தனது பள்ளிப்படிப்பை கைவிட்டுவிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு