Published:Updated:

`உயிரைப் பணயம்வச்சு திருட வந்தேன், கல்லாவ தொடச்சிவச்சிருக்க!'- கொள்ளையனின் `ஷாக்' கடிதம்

ஜி.சதாசிவம்

தற்கொலை செய்துகொள்பவர்கள், ஊரைவிட்டு ஓடுபவர்கள் கடிதம் எழுதிவிட்டுச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திருட வந்த கொள்ளையன் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு முயற்சி நடந்த கடை
திருட்டு முயற்சி நடந்த கடை ( எஸ்.தேவராஜன் )

கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகைக்கடை நடத்தி வருபவர் ஜெயராஜ் (65). இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். இன்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்ளன.

கிழித்து, வாரி இறைந்த பொருள்கள்
கிழித்து, வாரி இறைந்த பொருள்கள்
எஸ்.தேவராஜன்
Vikatan

உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்பக்க கூரையை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர் கல்லாவில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த அரிசி மூட்டை, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்தும், பொருள்களை வாரி இறைத்தும் சென்றுள்ளார்.

திருட வந்த நபர் எழுதிய கடிதம்
திருட வந்த நபர் எழுதிய கடிதம்
எஸ்.தேவராஜன்

மேலும், கல்லாவில் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், ``உயிரைப் பணயம்வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா. அதுக்குதான் இந்த குரங்கு வேலை" என எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து ஜெயராஜ், மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசு இல்லாத கல்லா
காசு இல்லாத கல்லா
எஸ்.தேவராஜன்

திருட வந்த நபர் கல்லாவில் காசு இல்லாததால் ஏமாற்றமடைந்து கடிதம் எழுதி வைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.