Published:Updated:

வேகம் குறையும் நாகர்கோவில் காசி வழக்கு... பின்னணியில் வி.ஐ.பி-கள்?!

காசி
காசி

ஏதாவது காரணத்தைச் சொல்லி பணம் கறப்பான். அவன் கேட்கும்போது பணம் கொடுக்க வில்லையெனில், 'உன் போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவேன்' என மிரட்டி பணம் பறிப்பான்.

காசியைப் பற்றி நன்கு அறிந்தவர்களிடம் பேசினோம். ''பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே பெண்கள் விஷயத்தில் காசி மோசமானவன். ஆரம்பத்தில் அவனது தெருவைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஏமாற்றிய விஷயம் வெளியில் தெரிந்து, அவனை செருப்பால் அடித்து எச்சரித்துள்ளனர். ஆனாலும் அவன் திருந்தவில்லை.

2013-ம் ஆண்டுவாக்கில் ஒரு போலீஸ் அதிகாரியின் மகளையே ஏமாற்றினான். ஆனால், போலீஸ் அதிகாரிகள் சிலரே அப்போது காசிக்கு சப்போர்ட் செய்ததால் அதிலிருந்து தப்பிவிட்டான். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பெண்கள் ஏமாந்திருக்க மாட்டார்கள்" என்றனர்.

''கல்லூரி மாணவிகளை மட்டுமல்ல, திருமணமான பெண்களையும் அவன் விட்டுவைக்கவில்லை. பெண்களுடன் தனிமையில் இருக்கும் போது வீடியோ, போட்டோ எடுத்து வைத்துக்கொள்வான். அவனது உறவுக்காரப் பெண்கள் சிலரையே அப்படி போட்டோ எடுத்து வைத்துள்ளான்.

வேகம் குறையும் நாகர்கோவில் காசி வழக்கு... பின்னணியில் வி.ஐ.பி-கள்?!

பிறகு, ஏதாவது காரணத்தைச் சொல்லி பணம் கறப்பான். அவன் கேட்கும்போது பணம் கொடுக்க வில்லையெனில், 'உன் போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவேன்' என மிரட்டி பணம் பறிப்பான். இப்படி காசியிடம் பல பெண்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் இழந்துள்ளனர்.

என்றாவது ஒரு நாள் சிக்குவோம் என்பது தெரிந்துதான், பாதுகாப்புக்காக வக்கீலுக்குப் படிக்கலாம் என முடிவுசெய்து சென்னையில் ஒரு சட்டக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான்.

காசியுடன் சில வி.ஐ.பி-களின் மகன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. காசி ஏமாற்றிய லிஸ்டில் வி.ஐ.பி வீட்டுப் பெண்கள் சிலரும் உள்ளனர். ஆகையால், காசி வழக்கால் தங்கள் பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்றெண்ணி, சில வி.ஐ.பி-கள் மேல்மட்டத்தில் அணைபோடுவதால், காசி வழக்கில் ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை'' என்கிறார்கள்.

காசியின் செல்போனை சோதனை செய்த போலீஸாருக்கு அதிர்ச்சி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் அளவுக்கு காசியின் நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியது அரசியல் பிரமுகர்கள் என்றால், நாகர்கோவில் காசியுடன் தொடர்பில் இருந்தது பல்வேறு துறைகளைச் சார்ந்த வி.ஐ.பி-கள்.

- இதுதொடர்பான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் நாகர்கோவில் காசி வழக்கு! Click Here https://bit.ly/3bRq8pK

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு