நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

புதிய இணையதளத்தில் சைபர் வழக்குகளைப் பதிவு செய்வது எப்படி?

கார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திகேயன்

சைபர் க்ரைம்

இன்றைக்கு ஆன்லைனில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கிறது. சைபர் குற்றங்களில் பாதிக்கப்படும் பலர், தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து புகார் செய்யத் தயங்குகிறார்கள். இதற்கு தீர்வாகத்தான் https://cybercrime.gov.in என்னும் தேசிய சைபர் குற்றப்பிரிவு இணைய தளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் சைபர் வழக்குகளைப் பதியும் நடைமுறை குறித்து சைபர் சட்ட வழக்கறிஞர் கார்த்திகேயன் சொன்னதாவது...

``மாநிலங்களை எடுத்துக்கொண்டால், சைபர் குற்றங்களுக்கு என தனிப்பிரிவு கிடை யாது. மாநிலங்களில் அனைத்துக் குற்றங் களையும் பதிவு செய்யும் வகையில் பொது இணையதளம்தான் உள்ளது. மேலும், சைபர் குற்றப் புகார்களை, காவல் நிலையங்களில் எடுத்துக்கொள்வதில்லை என்கிற பரவலான குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதனால், சைபர் குற்றங்களின் எண்ணிக்கைக்கும், பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் தொடர்ந்து இருந்து வருகிறது.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

https://cybercrime.gov.in என்ற இணையதளம் சைபர் வழக்குகளுக்கான மத்திய அரசின் பிரத்யேக இணையதளம் ஆகும். சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இணையதளத்தில் புகார் செய்யும்போது பெயர், மாநிலம் உள்ளிட்ட சில தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். இப்படி இணைய தளத்தில் பதிவாகியுள்ள புகாரை மத்திய தேசிய சைபர் குற்றப்பிரிவு ஆய்வு செய்து, பின்னர், புகாரை அந்தந்த மாநில குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைக்கும். காரணம், காவல் மற்றும் குற்றம் மாநிலப் பிரிவைச் சேர்ந்ததாகும்.

மத்திய பிரிவில் இருந்து மாநிலப் பிரிவுக்கு புகார் வந்தவுடன், அதற்கான நடவடிக்கைகளை காவல் நிலைய அதிகாரிகள் எடுப்பார்கள். பின்னர், புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் நாட்டில் நடக்கும் சைபர் குற்றங்கள் சரியாக விசாரிக்கப்பட்டு, முடிவு காணப்படும் நிலை உருவாகும்’’ என்றார்.

மக்களின் பிரச்னை தீரட்டும்!