Published:Updated:

கூட்டு வல்லுறவும்... கொன்று தூக்கிலிடுவதும்... உ.பி-யில் தொடரும் தலித் வன்கொடுமை!

வன்கொடுமை!
பிரீமியம் ஸ்டோரி
வன்கொடுமை!

2020-ம் ஆண்டு இதே உ.பி-யின் ஹத்ராஸில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு, கொலைசெய்யப்பட்டார்.

கூட்டு வல்லுறவும்... கொன்று தூக்கிலிடுவதும்... உ.பி-யில் தொடரும் தலித் வன்கொடுமை!

2020-ம் ஆண்டு இதே உ.பி-யின் ஹத்ராஸில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு, கொலைசெய்யப்பட்டார்.

Published:Updated:
வன்கொடுமை!
பிரீமியம் ஸ்டோரி
வன்கொடுமை!

2014-ம் ஆண்டு, மே 27-ம்தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் இருக்கும் கட்ரா என்ற கிராமத்தில் ஒரு கொடுமை நிகழ்ந்தது. வீட்டில் கழிப்பறை இல்லாததால், ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்ற இரண்டு தலித் சிறுமிகளை வெறிபிடித்த கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. அந்தச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்டனர்.

அந்தப் புகைப்படம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `தலித்துகள் என்பதால் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகூட மறுக்கப்படுகிறதா?’ என்று விவாதங்கள் அனல் பறந்தன. ‘ஒரு மனிதனுக்கான எந்தவித அடிப்படை உரிமையும் சாதி, மதம், இனம், பால், பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் மறுக்கப்படக் கூடாது’ என்று சொல்லும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘ஆர்ட்டிகிள் 15’ குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த, எழுத்திலும் பேச்சிலும் சமூக ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்பை அதிகப் படுத்தினர். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து வெளிவந்த ‘Article 15’ என்ற திரைப்படமும் பலத்த அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.

கூட்டு வல்லுறவும்... கொன்று தூக்கிலிடுவதும்... உ.பி-யில் தொடரும் தலித் வன்கொடுமை!

எதுவும் மாறவில்லை!

ஆனால், உ.பி-யில் எதுவும் மாறவில்லை. மாறுவதாகவும் தெரியவில்லை. எட்டு ஆண்டு களுக்குப் பிறகு அதே போன்ற ஒரு சம்பவம் இந்த செப்டம்பர் 14-ல் நிகழ்ந்திருக்கிறது.

உ.பி-யின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் நிகாசன் காவல் நிலைய எல்லையிலுள்ள தமோலி புர்வா என்ற கிராமத்தில், பதாவுன் சம்பவம் போலவே, 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு மைனர் சிறுமிகள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தன. துடிதுடித்தபடி சம்பவ இடத்துக்கு வந்த தாய், அழுது அரற்றியபடி நடந்த சம்பவத்தை விவரித்தார். “மூன்று தடியர்கள் என் வீட்டுக்குள் திமிராக நுழைந்தார்கள். குளித்துக்கொண்டிருந்த நான் ஓடி வருவதற்குள் மகள்கள் இருவரையும் பலவந்தப்படுத்தி பைக்கில் அழைத்துச் சென்றார் கள். என்னால் எதுவும் செய்ய முடிவில்லை. அந்த தடியர்கள்தான் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும்” என்று கதறியிருக்கிறார்.

“மூத்தவள் 10-ம் வகுப்பும், இளையவள் 8-ம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு எல்லாமே என் மகள்கள்தான். அவர்களை ஆசிரியர்களாக ஆக்க வேண்டுமென்பது என் ஆசை. அதற்காக, வறுமையிலும் கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். ஏதுமறியாத அப்பாவிக் குழந்தைகளைச் சீரழித்துக் கொன்றுவிட்டார்கள். நான் என்ன செய்வேன்...” என்ற தாயின் கூக்குரலுக்கு யாரிடமும் பதிலில்லை.

இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். துணை முதல்வர் பிரஜேஷ் பாதக், “குற்றவாளிகளின் தலைமுறையே நடுங்கும் வண்ணம் அவர்கள்மீதான நடவடிக்கை இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார். “பாலியல் குற்றவாளிகளை மாலையிட்டு, திலகமிட்டு வரவேற்கும் பா.ஜ.க-வினர் சொல்வதை எந்த அளவுக்கு நம்புவது?” என்று அரசியல் விமர்சகர்கள் அவநம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

பாலியல் கொலைகள் ஒரு தொடர்கதை!

2020-ம் ஆண்டு இதே உ.பி-யின் ஹத்ராஸில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு, கொலைசெய்யப்பட்டார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் அங்கு செல்லவே தடையெல்லாம் விதிக்கப்பட்டது. குடும்பத்தின ருக்கே தெரியப்படுத்தாமல் அந்தப் பெண்ணின் உடலை போலீஸார் எரித்துவிட்டனர். அதன் பிறகும் பாலியல் கொலைகள் அங்கே தொடர்கதையாகத்தான் இருக்கின்றன.

இப்போது நடந்திருக்கும் நிகாசன் சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புகூட, (7-9-2022) உ.பி தலைநகர் லக்னோவுக்கு அருகிலிருக்கும் ‘பிலிஃபிட்’ கிராமத்திலும் இதே போன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறது. தன் வீட்டு வாசலில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஒரு கும்பல் தூக்கிச் சென்று, கரும்புத் தோட்டத்தில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. உடலில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரண மடைந்துவிட்டார். இந்தச் சிறுமியும் தலித் சமூகத் தைச் சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமை (17-9-2022) இதே பதாவுன் மாவட்டம் அசஃப்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே 15 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.

2021-ம் ஆண்டில் மட்டும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, கொலையும் செய்வது என்ற பாணியில் 48 சம்பவங்கள் உ.பி-யில் பதிவாகியிருக்கின்றன. இது போன்ற தொடர் சம்பவங்களால் NCRB (National Crime Records Bureau) ரிப்போர்ட்டில் இந்தியாவில், பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நிகழும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உ.பி இருக்கிறது.

கூட்டு வல்லுறவும்... கொன்று தூக்கிலிடுவதும்... உ.பி-யில் தொடரும் தலித் வன்கொடுமை!

நிரூபிக்குமா உ.பி அரசு?

உ.பி-யில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா விலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவருகின்றன. 2020-ல் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், 2021-ம் ஆண்டு 20 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக என்.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. உ.பி-யில் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகும் பெண்களில் பெரும்பாலோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது, நிகாசனில் கொல்லப்பட்ட இரு சிறுமிகளும் தலித் சமூகத்தினர்தான் என்பதுதான் யோகி அரசை நோக்கிப் பலரின் விரல்கள் நீள்வதற்குக் காரணம்.

கட்டுரையில் முதலில் சொன்ன ‘Article 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்தது. அதில் “எல்லாரும் சமம்னா, யார் ராஜா?” என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும். அந்தப் படத்திலேயே அதற்கு பதிலும் இருக்கும். “எல்லாரையும் சமமா யார் நினைக்கறாங்களோ... அவங்கதான் ராஜா.”

நேர்மையாக நடவடிக்கை எடுத்து, ‘எங்களுக்கு எல்லோரும் சமம்தான்’ என்று நிரூபிக்குமா உ.பி அரசு?