Published:Updated:

குஜராத்: குறிப்பிட்ட சாதிக்கு எதிராக வெறுப்பு பதிவு?! - பட்டியலின வழக்கறிஞர் கொலை

கொலை
கொலை ( Representational Image )

ஆதாரங்களின் அடிப்படையில், இருவரும் தொலைபேசி வாயிலாக 13-14 நிமிடங்கள் வரை சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்துக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முகநூலில், குறிப்பிட்ட ஒரு சாதியை இழிவுபடுத்தும்விதமாக பதிவுகளைப் பகிர்ந்த காரணத்துக்காக தேவ்ஜி மகேஸ்வரி எனும் பட்டியல் வகுப்பைச் சார்ந்த வழக்கறிஞரை, வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத் மாநிலம், படான் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தேவ்ஜி மகேஸ்வரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தலித் கூட்டமைப்பின் வழக்கறிஞராகச் செயல்பட்டுவந்தாா். தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது குறிப்பிட்ட ஒரு சாதியினரை இழிவுபடுத்தும்விதமாக கருத்துகளைப் பதிவேற்றி வந்திருக்கிறார்.

இந்தநிலையில் ரபார் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபரான பரத் ராவல் என்பவர், தேவ்ஜி பதிவேற்றும் பதிவுகள் குறித்து தொடர்ந்து முகநூலிலும், தொலைபேசியின் வாயிலாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்திருக்கிறார். ஒருகட்டத்தில் மிகுந்த கோபமடைந்த பரத் ராவல், கடந்த ஜூலை மாதம் தேவ்ஜி மகேஸ்வரியைத் தொலைபேசியில் அழைத்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அன்று நிகழ்ந்த அழைப்பில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம், கடுமையான சொற்களால் நெடுநேரம் நீண்டிருக்கிறது. இறுதியில், ராவத் இத்தோடு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு எச்சரித்திருக்கிறார்.

ஆனால், தேவ்ஜி மேலும் பதிவிடுவதைத் தொடர ஆத்திரமடைந்த ராவத் கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, தேவ்ஜியை அவர் அலுவலகத்தில்வைத்தே கொலை செய்திருக்கிறார்.

தேவ்ஜி மகேஸ்வரி
தேவ்ஜி மகேஸ்வரி

கொலைச் சம்பவத்தையடுத்து, தேவ்ஜியின் மனைவி மினாக்ஷிபென் போலீஸாாிடம் அளித்த புகாாின் அடிப்படையில் படான் மாவட்ட டி.ஐ.ஜி. மோத்தலியா தலைமையில் அமைந்த சிறப்பு விசாரணை குழு ராவத்தையும் அவரது நண்பர்கள் எட்டுப் பேரையும் கைதுசெய்து நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக டி.ஐ.ஜி மோத்தலியா பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், `தற்போது கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், இருவரும் தொலைபேசி வாயிலாக 13-14 நிமிடங்கள் வரை சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். மேலும் ராவத், பலமுறை இந்தச் செயலை நிறுத்தக்கோாி தேவ்ஜியை எச்சரித்து மிரட்டல் விடுத்துவந்திருக்கிறா.

பரத் ராவத்திடம் மேற்கொண்ட விசாரணையிலும், தேவ்ஜியின் முகநூல் பதிவுகளின் மூலமும் கொலை நிகழ்ந்ததற்கு சர்ச்சைக்குரிய அந்தப் பதிவுகளே காரணமாக இருக்கின்றன.

கொலை செய்த ராவத், அவரது நண்பர்களான பிரகாஷ் பீரா, ராஜேஷ் அலியாஸ், விக்ரம் தேவ்தா உள்ளிட்டோாின் உதவியேடு மும்பைக்குத் தப்பிச் சென்றிருக்கிறார். ஆனால், மும்பை போலீஸாா் ஓரிரு நாள்களிலேயே அவர்களை மடக்கிப்பிடித்திருக்கிறார்கள்.

தேவ்ஜியின் மனைவி மினாக்ஷிபென் அளித்த புகாரில், ``என் கணவர் ரபார் நகரிலுள்ள சமாஜ்வாதி சமூக மண்டபம் தொடர்பான சா்ச்சைக்குரிய வழக்கொன்றை எடுத்து நடத்தத் தொடங்கினாா். அப்போதிலிருந்தே, இது போன்ற மிரட்டல்களை பரத் ராவத் விடுத்துவந்தார்" என்று கூறியிருக்கிறார்.

மினாக்ஷியின் புகாரின் அடிப்படையில், ராவத் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இன்னும் சரிவரக் கிடைக்காததால், மேலும் விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு