Published:Updated:

மத்தியப் பிரதேசம்: தலித் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை, 6 பேர் கைது - என்ன நடந்தது?

தலித் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை ( ட்விட்டர் )

தலித் சமூகத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

மத்தியப் பிரதேசம்: தலித் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை, 6 பேர் கைது - என்ன நடந்தது?

தலித் சமூகத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
தலித் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமண்டி அஹிர்வார் (60). இவர் தன் மனைவி ராஜ்பியாரி (58) மகன்கள் மனாக் (33), மகேஷ் (30) ஆகியோருடன் வசித்துவந்தார். சமீபத்தில் அவர் மகன் மனாக், சீதா அஹிர்வார் என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை 6:30 மணியளவில், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெகதீஷ் படேலின் மனைவி வந்தனா, வாசலைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது மனாக் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்  சுட்டுக் கொலை
தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து வந்தனா தன் கணவர் ஜெகதீஷ் படேலிடம் இதைக் கூறியிருக்கிறார். இது இரு குடும்பத்தாருக்கும் மத்தியில் சண்டையாக மாறியிருக்கிறது. ஆத்திரமடைந்த ஜெகதீஷ் படேலும் அவரின் குடும்பத்தாரும், மனாக் வீட்டுக்குள் புகுந்து மனாக், அவர் தந்தை, தாய், சகோதரன் ஆகியோரைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் மனாக், அவரின் தந்தை கமண்டி அஹிர்வார், தாய் ராஜ்பியாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மகேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, ``மனாக் குடும்பத்தைச் சுட்டுக் கொலைசெய்தது தொடர்பாக ஜெகதீஷ் படேல், அவர் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இவர்கள் மீது ஐ.பி.சி., பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச பா.ஜ.க அரசுக்கு மாயாவதி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபோல, உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் வலியுறுத்தியிருக்கிறார்.