Published:Updated:

`நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா' - தீண்டாமையால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்!

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆதிக்க ஜாதி வெறியையை சிலர் ஊட்டியிருக்கிறார்கள்.

சரவணக்குமார்
சரவணக்குமார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவரை சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தி முதுகில் பிளேடால் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணக்குமார்
சரவணக்குமார்

நேற்று நடந்த இச்சம்பவம் தற்போது வெளியில் தெரியத் தொடங்கியதால் இந்த வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மாணவர் கூடுதல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி நம்மிடம் பேசிய தி.வி.க. மாவட்டத்தலைவர் மணி அமுதன், ''அலங்காநல்லூர் அருகிலுள்ள மறவப்பட்டியைச் சேர்ந்த பட்டியிலினத்தை சேர்ந்த ராமுவின் மகன் சரவணக்குமார். இவர் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவருடைய பள்ளிப் பையை மகேஸ்வரன் என்ற மாணவர் எடுத்து ஒளித்து வைத்து தேட வைத்துள்ளனர்.

சரவணக்குமார்
சரவணக்குமார்

இது தெரிந்து, ஏன் பையை ஒளித்து வைத்தாய் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சரவணக்குமாரை சாதிப்பெயரை சொல்லி அசிங்கமாகத் திட்டிய மகேஸ்வரன், நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா என்று கூறியபடியே திடீரென்று பென்சில் டப்பாவிலிருந்து பிளேடை எடுத்து சரவணகுமாரின் முதுகில் கிழித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

வலி பொறுக்க முடியாமல் சரவணக்குமார் அலறவும், சக மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு வந்து மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆதிக்க ஜாதி வெறியையை சிலர் ஊட்டியிருக்கிறார்கள்.

சரவணக்குமார்
சரவணக்குமார்

அதன் விளைவு சக மாணவரை காயம் ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. இதில் சரியான நடவடிக்கையைக் காவல்துறை எடுக்க வேண்டும்'' என்றார். இந்த நவீன காலத்திலும் கிராமப்புற பள்ளியிலிருந்துகூட சாதிப் பாகுபாட்டையும் வன்முறை செயலையும் அகற்ற முடியவில்லை என்பது வேதனைப்பட வைக்கிறது. காவல்துறையினர் இப்புகார் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.