Published:Updated:

கூட்டு பாலியல் வன்கொடுமை; குழந்தையுடன் கால்வாயில் வீசப்பட்ட பெண்! - பீகார் கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

பாதிக்கப்பட்ட பெண்ணின் 5 வயதுக் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளான அப்பெண், மருத்துவ சிகிச்சைக்காக பக்ஸர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 19 வயது பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பீகாரில் பட்டியலின பெண் ஏழு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நீர் நிலையொன்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய ஐந்து வயது மகனையும் 7 பேர் கொண்ட கும்பல் நீர்நிலையில் வீசிச் சென்றிருக்கிறது.

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் 28 வயது பட்டியலினப் பெண்ணுக்கு இந்தக் கொடுமை நேர்ந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் உடல் கால்வாயில் மிதப்பதை நேற்று அதிகாலை 3 மணியளவில் பார்த்த அவரின் பெற்றோர், போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் 5 வயதுக் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளான அப்பெண், மருத்துவ சிகிச்சைக்காக பக்ஸர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை
கொலை
Representational Image
ஹத்ராஸ்: `அரசுக்கு எதிராகப் பேச இளம்பெண் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் பேரம்!'- உ.பி போலீஸ்

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், ``சனிக்கிழமை காலையில் வங்கிக்கு செல்வதாக மகனுடன் எனது மகள் சென்றார். அன்று மாலை வரை அவர் வீடு திரும்பாததால், கிராமத்தினருடன் சேர்ந்து தேடத் தொடங்கினேன். அப்படி தேடும்போதுதான், கிராமத்தின் அருகில் உள்ள கால்வாயில் அவரைக் கண்டுபிடித்தோம். குளத்தில் மூழ்கி எனது பேரன் இறந்துவிட்ட நிலையில், மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். எனது மகளை இந்தநிலைக்கு ஆளாக்கியவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்று கதறினார்.

இதுகுறித்து பக்ஸர் போலீஸ் அதிகாரி கே.கே.சிங், ``பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து ஒருவரைக் கைது செய்துள்ளோம். மேலும், ஆறு நபர்களைத் தீவிரமாக தேடி வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏழு பேரில் இருவர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஐந்து பேர் குறித்து விசாரித்து வருகிறோம். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

 பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், அந்தப் பெண் தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன் அவரின் கணவர், அப்பெண்ணின் வீட்டுக்கு வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனால், விசாரணை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிர்ச்சியினால் அவர், பேசமுடியாத நிலையில் இருக்கிறார். அதனால், கூடுதல் தகவல்களைத் தற்போதைய சூழலில் பெறமுடியவில்லை. குழந்தையின் உடலை பிரதேச பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு