Published:Updated:

தூத்துக்குடி: செல்ஃபி பாய்ன்ட் முன்பு அநாகரீக டான்ஸ்; வைரல் வீடியோ - எச்சரித்து அனுப்பிய போலீஸார்!

அவதூறு வீடியோ வெளியிட்ட 11 பேர்

தூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயின்ட் முன்பு ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் உலாவ விட்ட 11 மாணவர்களை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

தூத்துக்குடி: செல்ஃபி பாய்ன்ட் முன்பு அநாகரீக டான்ஸ்; வைரல் வீடியோ - எச்சரித்து அனுப்பிய போலீஸார்!

தூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயின்ட் முன்பு ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் உலாவ விட்ட 11 மாணவர்களை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Published:Updated:
அவதூறு வீடியோ வெளியிட்ட 11 பேர்

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காக்கள் வடிவமைப்பு, சாலைகள் விரிவாக்கம், சாலைகளில் ஓவியங்களால் அழகுபடுத்துதல், முக்கிய சந்திப்புகளில் செயற்கை நீரூற்று, கடற்கரை பூங்கா மேம்பாடு, செல்ஃபி பாய்ன்ட் ஆகியவை அமைக்கப்படுள்ளன. இந்த இடங்களில் உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்து தூத்துக்குடி வருபவர்களும் தங்களின் செல்போன்களில் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.

ஆபாச நடனம்
ஆபாச நடனம்

இதில், ஜெயராஜ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள  ’நம்ம தூத்துக்குடி’ என்ற செல்ஃபி பாயின்ட் , செயற்கை நீரூற்று, முத்துநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஐ லவ் தூத்துக்குடி’ என்ற செல்ஃபி பாயின்ட்  உள்ளிட்ட சில இடங்களில் 11 மாணவர்கள் தவறான மற்றும் ஆபாசமான செய்கைகளைக் காட்டி, மாவட்டத்தை தவறாக சித்தரித்து அவமதிக்கும் வகையில் ஒரு வீடியோவை கடந்த சில நாள்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மாணவர்களின் ஆபாச நடனம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்த அந்த வீடியோ வைரலானது. அத்துடன் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இதுகுறித்து சிலர், மாநகராட்சி மேயர், ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகாரும் அனுப்பியுள்ளனர். இது குறித்து தூத்துக்குடி போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அவதூறு வீடியோ வெளியிட்ட 11 மாணவர்களை அடையாளம் கண்டறிந்தனர். அவர்களை அழைத்து கேட்கப்பட்ட விளக்கத்தில், “நாங்க சும்மா ஜாலிக்காகத்தான் வீடியோ எடுத்தோம். இனிமேல் இது மாதிரி தவறான வீடியோக்களை எடுக்க மாட்டோம்.  

ஆபாச நடனம்
ஆபாச நடனம்

மாவட்டத்தை அவமதித்தது தவறுதான்” என தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினர். அவர்களை போலீஸார், எச்சரித்து அனுப்பினர்இதனைத்தொடர்ந்து 11 மாணவர்களும் மீண்டும் ‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயின்டிற்கு முன்பு வரிசையாக நின்று தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டும், வருத்தம் தெரிவித்தும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளனர். அந்த மன்னிப்பு வீடியோவும் வைரலாகி வருகிறது.